ஈரானின் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்காமல் இருக்க முடியாது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
பாரசீக வளைகுடாவில் உள்ள தெற்குத் துறைமுகமான ஜஸ்க் மற்றும் கார்க் தீவுக்கு அருகில் மூன்று ஈரானிய எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா படைகள் தாக்கியதாக ஈரான் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து கொழும்பியாவில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஈரானின் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்காமல் இருக்க முடியாது என்று தெரிவித்தார்.
ஈரான் தொடர்ந்து அமெரிக்க கடற்படை கப்பல்களை தாக்க முயற்சிக்கிறது என்றும் கூறினார். எனவே, ஒவ்வொரு முறையும் அவர்கள் அவ்வாறு செய்யும்போது அல்லது செய்ய முயற்சிக்கும்போது, அவர்கள் எண்ணெய் கப்பல்களை இழக்க நேரிடும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.


