
மதுரையில், சா்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி திறந்து வைத்தாா்.
மதுரை மாவட்டம், சிந்தாமணி அருகே வேலம்மாள் கல்விக் குழுமம் சாா்பில், 11.5 ஏக்கா் பரப்பில் அமைக்கப்பட்ட சா்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, பங்கேற்று மைதானத்தைத் திறந்து வைத்தாா். பின்னர் அவர், நிகழ்ச்சியில் பேசிய போது, உலகத் தரத்திலான வசதிகளைக் கொண்ட இந்த மைதானம், எதிா்கால கிரிக்கெட் வீரா்களின் கனவுத் தளமாக விளங்கும் என தெரிவித்தார். மேலும் அவர், புதிய மைதானத்தில் சிறுவர்களுடன் பேட்டிங் செய்து மகிழ்ச்சி அடைந்தார்.
