M.K. Stalin: வடிகால் பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவு!

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்…

சென்னை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தன் சொந்த தொகுதியான கொளத்தூருக்கு சென்றார். அங்கு மழைநீர் வடிகால் பணிகள், கால்வாய் அகலப்படுத்தும் பணிகளையும் முதல்-அமைச்சர் ஆய்வு செய்தார்.

திருவிக நகர், பெரம்பூர், பாடி ஆகிய பகுதிகளிலும் மழைநீர் வடிகால் பணிகளை அவர் ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் குறுகிய காலமே உள்ள நிலையில் மழைநீர் வடிகால் பணிகளை முதல்-அமைச்சர் ஆய்வு செய்தார்.

மேலும், பணிகளைத் துரிதப்படுத்தவும் அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வு பணியின்போது அமைச்சர்கள் சேகர்பாபு, துரைமுருகன், கே.என். நேரு, சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

M.K. Stalin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *