Lok Sabha Elections 2024: நட்சத்திர ஹோட்டலில் ஓகே ஆன “டீல்”… அதிமுகவிற்கு பாஜக செக்!

Advertisements

சென்னை: பாஜக கூட்டணியில் அமமுக-விற்கு 4 தொகுதிகளும், ஓபிஎஸ் அணிக்கு 4 தொகுதிகளும் ஒதுக்கப் பாஜக முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பாஜக நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் நேற்று நள்ளிரவு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

நேற்று தனியார் ஹோட்டலில் பாஜக தலைவர்கள் ஓபிஎஸ் அணியுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தக் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஓ பன்னீர்செல்வத்திற்கு 4 இடங்களைக் கொடுக்கப் பாஜக ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. ஓ பன்னீர்செல்வம் முன்னுரிமை: 6 இடங்களை அவர் கேட்ட நிலையில் 4 இடங்களைக் கொடுக்கப் பாஜக ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

பாஜக கூட்டணிக்கு வர எடப்பாடி பழனிசாமி இதற்கு இறங்கி வராத காரணத்தால் தற்போது ஓ பன்னீர்செல்வம் பக்கம் பாஜக திரும்பத் தொடங்கி உள்ளதாம். எடப்பாடி இறங்கி வராத காரணத்தால் ஓ பன்னீர்செல்வத்தை வைத்து அதிமுகவிற்கு பிரஷர் கொடுக்க டெல்லி முடிவு செய்துள்ளதாம். விரைவில் மோடி – ஓபிஎஸ் மீட்டிங் நடக்கும் என்றும் கூறுகின்றனர் பாஜகவினர். இந்த நிலையில்தான் நேற்று தனியார் ஹோட்டலில் பாஜக தலைவர்கள் ஓபிஎஸ் அணியுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தினர்

இன்னொரு பக்கம் ஏற்கனவே அமமுக – பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது. இதில் அமமுகவிற்கும் 4 இடங்கள் கொடுப்பது தொடர்பாக ஆலோசனைகள் நடந்ததாகக் கூறப்படுகிறது. அதன்படி அமமுக-விற்கு 4 தொகுதிகளும், ஓபிஎஸ் அணிக்கு 4 தொகுதிகளும் ஒதுக்க இன்று பாஜக சார்பாகக் கையெழுத்து போடப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக வரவில்லை; அதிமுகவை பாஜக கூட்டணிக்குக் கொண்டு வருவதற்கான தீவிரமான முயற்சிகளைப் பாஜக எடுத்து வந்தது.

பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி வைக்க வேண்டும் என்று முக்கியமான “புள்ளி” ஒருவர் எடப்பாடி பழனிசாமிக்கு போன் செய்து கோரிக்கை விடுத்து வந்தார். ஆனால் எடப்பாடி பாஜகவுடன் செல்லும் முடிவை எடுக்கமாட்டார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜக வேண்டாம். தனியாகவே தேர்தலைச் சந்திக்கலாம் என்ற முடிவில் அவர் இருக்கிறாராம்.

இதன் காரணமாகவே அதிமுகவை கவுண்டர் செய்யும் விதமாக அமமுக, ஓபிஎஸ் ஆகியோருக்கு தலா 4 இடங்களைக் கொடுக்கப் பாஜக முடிவு செய்துள்ளதாம்.

பாமக கூட்டணி: இது போகப் பாஜக – பாமக கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாம். கிட்டத்தட்ட இரண்டு கட்சிகளுக்கும் இடையில் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் சூழல் ஏற்பட்டு உள்ளது. இதில் அன்புமணி 10 லோக்சபா சீட் + 1 ராஜ்ய சபா சீட் + ஒரு அமைச்சர் பதவி கேட்க. 1 ராஜ்ய சபா சீட் + ஒரு அமைச்சர் பதவி கிடையாது.

5 லோக்சபா சீட் என்று பாமக கேட்டுள்ளதாம். இதையடுத்து பாமக இறங்கி வந்து 7 லோக்சபா சீட் + அமைச்சர் பதவி என்றுள்ளதாம். இதையடுத்து 7 லோக்சபா சீட் ஓகே + மத்திய பிரிவுகளில் பெரிய பதவி ஒன்று + பாமகவில் ஒருவர் எம்பி ஆனால் அமைச்சர் பதவிபற்றிப் பார்க்கலாம் என்று பாஜக சொல்லி இருக்கிறதாம். இதைப் பாமக ஏற்றுக்கொண்டதாகத் தகவல்கள் வருகின்றன.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *