
பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ. வான குஞ்ஜா சத்யவதி மரணம்!
தெலுங்கானா பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ.வான குஞ்ஜா சத்யவதி மாரடைப்பால் இன்று காலமானார்.
ஐதராபாத்: தெலுங்கானாவில் பத்ராசலம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் குஞ்ஜா சத்யவதி. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அவர், தேர்தலில் வெற்றி பெற்று 2009 முதல் 2014 ஆண்டுவரை எம்.எல்.ஏ.வாகப் பதவி வகித்தவர். இதன்பின்னர் குஞ்ஜா சத்யவதி, பா.ஜ.க.வில் சேர்ந்து கட்சி பணியாற்றினார். இந்நிலையில், குஞ்ஜா சத்யவதிக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
எனினும், குஞ்ஜா சத்யவதி வழியிலேயே காலமானார். குஞ்ஜா சத்யவதி மறைவுக்கு மத்திய மந்திரி மற்றும் தெலுங்கானா பா.ஜ.க. தலைவர் கிஷன் ரெட்டி, தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரேவந்த் ரெட்டி மற்றும் சிலர் இரங்கல்களைத் தெரிவித்து உள்ளனர்.


