
தமிழ் திரையுலகில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்த கிரண் இன்று தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் 43 வயதிலும் முரட்டு சிங்கிளாக இருக்கும் நடிகை கிரணுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
90ஸ் கிட்ஸின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் கிரண். இவர் கடந்த 2002-ம் ஆண்டு சரண் இயக்கத்தில் வெளிவந்த ஜெமினி படம்மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். வட நாட்டு பெண்ணான கிரணுக்கு அப்படத்திலும் வடமாநில பெண் கதாபாத்திரம் தான் கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் கதைக்கேற்ப கச்சிதமாகப் பொருந்தி இருந்தார். இப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருந்த கிரண் கவர்ச்சியிலும் புகுந்து விளையாடி இருந்தார்.
ஜெமினி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுந்தர் சி இயக்கிய கிளாசிக் ஹிட் திரைப்படமான வின்னர் படத்தில் நடிகர் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்தார் கிரண். இப்படத்திலும் கிளாமர், கவர்ச்சி, காமெடி, நடனம் என அனைத்து ஏரியாவிலும் ஸ்கோர் செய்து ஆல் ரவுண்டராக அசத்தி இருந்தார் கிரண். இப்படி அடுத்தடுத்து இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்த கிரணுக்கு அஜித்துக்கு ஜோடியாக வில்லன் படத்திலும், கமலுடன் அன்பே சிவம் படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இப்படி டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தாலும் தன்னுடைய கிளாமருக்கு மவுசு இருப்பதை அறிந்த கிரண், விஜய், விஷால், விஜயகாந்த், போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடி அதற்காக அந்தச் சமயத்திலேயே பெரும் தொகையைச் சம்பளமாக வாங்கினார். குறிப்பாக விஜய்யுடன் திருமலை படத்தில் கிரண் ஆடிய வாடியம்மா ஜக்கம்மா பாடல் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இப்படி டாப் பார்மில் இருந்த நடிகை கிரண், 30 வயதை தாண்டியதும் அவருக்குப் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின. கடைசியாகச் சுந்தர் சி உடன் கடந்த 2016-ம் ஆண்டு வெளிவந்த முத்தின கத்திரிக்காய் என்கிற திரைப்படத்தில் நடித்த கிரண், அதன்பின் ஆள் அட்ரஸ்ஸே தெரியாமல் காணாமல் போனார். இதையடுத்து சோசியல் மீடியாவில் கவர்ச்சி புகைப்படங்களைப் பதிவிட்டு வந்த கிரண், ஒரு கட்டத்தில் தன்னுடையை கவர்ச்சியை வைத்தே கல்லாகட்ட தொடங்கினார்.
இவர் தனியாகச் செயலி ஒன்றை தொடங்கி, அதில் தன்னுடன் டேட்டிங் செய்ய இவ்வளவு, தன்னுடன் வீடியோ காலில் பேச இவ்வளவு, தன்னுடையை பிரத்யேகமான கவர்ச்சி புகைப்படங்களைப் பார்க்க இவ்வளவு எனத் தனித்தனியாக விலைப்பட்டியலை அந்த ஆஃப்பில் வெளியிட்டு அதன்மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்தும் வருகிறார்.
நடிகை கிரண் இன்று தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். 43 வயதிலும் முரட்டு சிங்கிளாக இருக்கும் நடிகை கிரணுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் அவரின் சொத்து மதிப்புகுறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகை கிரணுக்கு ரூ.35 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.




