கேரளாவில், கேரள போலீஸ் கமாண்டோக்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கு இடையே மோதல்..!. ஒரே வாரத்தில் 2வது சம்பவம்..!!
கேரள காவல்துறையின் சிறப்பு குழுவான தண்டர்போல்ட் மற்றும் மாவோயிஸ்டுகளுக்கு இடையே கண்ணூரில் உள்ள வனப்பகுதியில் துப்பாக்கிச் சண்டை வெடித்துள்ளது. இச்சம்பவம் கரிக்கோட்டக்கரை காவல் நிலைய எல்லைக்குள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாக ஒரு போலீஸ் அதிகாரி பி.டி.ஐ.யிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் வயநாட்டில் உள்ள வனப்பகுதியில் தண்டர்போல்ட்டுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்த சில நாட்களுக்குப் பிறகு, இரண்டு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்ட நிலையில் இரண்டாவது முறையாக துப்பாக்கிச்சூடு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. செய்தி ஊடகங்கள் இச் சம்பவம் குறித்து விவாதம் செய்து வருகிறது.