
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் விஜயைக் கைது செய்ய வலியுறுத்தித் திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பரப்புரை செய்தபோது நிகழ்ந்த நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதற்கு முதற்காரணமான விஜயைக் கைது செய்யக் கோரித் திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழர் விடுதலைக் கழகம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக வெற்றிக் கழகத்துக்கும் விஜய்க்கும் எதிராக முழக்கமிட்டனர்.
