கங்கனாவின் ‘ஸ்கேரி பிக்சர்’ அறிவிப்பு வெளியீடு!

நடிகை கங்கனா ரணாவத் நடிக்கும் ஸ்கேரி பிக்சர்’ படத்தின் அறிவிப்பு வீடியோவை தெலுங்கு நடிகர் ராணா டகுபதி வெளியிட்டுள்ளார்.
தெலுங்கு இயக்குநர் ரவி பாபு இயக்கத்தில், நடிககை கங்கனா ரணாவத் நடிக்கும் புதிய படத்துக்கு ‘ஸ்கேரி பிக்சர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.  இந்தப் படத்தை இயக்குநரே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான பிளையிங் பாக்ஸ் புரடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் தயாரிப்பாளராக ராணா டகுபதியின் தந்தை சுரேஷ் பாபு இணைந்துள்ளார்.ஸ்கேரி பிக்சர்’ படத்தின் அறிவிப்பு வீடியோவை தெலுங்கு நடிகர் ராணா டகுபதி வெளியிட்டுள்ளார். அதில் ‘கொடுங்கனவு விரைவில் அம்பலமாகும்’ எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படம் தேதி குறிப்பிடாமல் அடுத்தாண்டு வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *