வீரமணி வழக்கில் புதிய திருப்பம்.. அருண் ஐ.பி.எஸ். குற்றவாளியா.?

கிரணைட் வீரமணி வழக்கில் புதிய திருப்பங்கள் அரேங்கேரி வருகின்றன. சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் பிரபல தொழிலதிபர் கிரணைட் வீரமணி. இவருக்கு உதவிய குற்றச்சாட்டில் வீரமணியின் தோழி சாந்தி, அவரின் கணவர் மகேந்திர சிம்கன் உள்பட சிலரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். பரபரப்பை ஏற்படுத்தும் இந்த வழக்கை விசாரிக்க செப்டம்பர் 24ம் தேதி சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தார் டி.ஜி.பி மகேஷ்குமார் அகர்வால்.

சென்னை மத்திய குற்றப்பிரிவின் ஐ ஜி தேன்மொழியின் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் வீரமணி வழக்கை விசாரித்து வருகின்றகர். இந்த நிலையில் சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் கிரணைட் வீரமணியால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் அடுத்தடுத்து புகார்களை கொடுத்ததையடுத்து அதன்பேரிலும் ஏழு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

கிரணைட் வீரமணி தொடர்புடைய வழக்குகள் சென்னை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்குகளில் ஆஜராக தமிழக அரசு வழக்கறிஞர்களையும் நியமித்திருக்கிறது. இந்தநிலையில்தான் கிரணைட் வீரமணி மீது சிறப்பு புலனாய்வு குழு பதிவு செய்த வழக்கு ஒன்றில் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்திருக்கிறார்கள்.

அதில் வழக்கு தொடர்புடைய முக்கிய தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. போலீசார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ததும் அதில் முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உள்ளிட்டோரின் பெயர்கள் இருப்பதாக தகவல்கள் வேகமாக பரவின. இது குறித்து எஸ்.ஐ.டி போலீசாரிடம் கேட்டதற்கு, இந்தக் குற்றப்பத்திரிகையில் எந்த காவல்துறை அதிகாரிகளின் பெயர்களையும் சேர்க்கவில்லை என்று விளக்கமளித்தனர்.

இதையடுத்து நம்மிடம் பேசிய எஸ்.ஐ.டி போலீஸ் உயரதிகாரி ஒருவர், கிரணைட் வீரமணி மீது விபச்சார தடுப்பு பிரிவு போலீஸார், 2025-ல் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அதைத் தொடர்ந்து அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றங்களை நிரூபிக்க முடியவில்லை என கூறி வழக்கை முடித்து வைக்க ரிப்போர்ட் ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர். அந்த ரிப்போர்ட்டை நீதிமன்றம் ஏற்காமல் மீண்டும் விசாரிக்க சென்னை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டது.

அதன் பிறகு விசாரணை நடத்தியதில்தான் குற்றம் சாட்டப்பட்ட கிரணைட் வீரமணி, சாந்தி குறித்த அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தன. கிரணைட் வீரமணியால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் அளித்தனர். இதையடுத்து கிரணைட் வீரமணியால் பாதிக்கப்பட்ட சிறுமிகள், அடுத்தடுத்து புகார்களை எங்களிடம் கொடுத்தனர். அதன் அடிப்படையில் ஏழு வழக்குள் பதிவு செய்யப்பட்டன. இதில் செப்டம்பர் 27ம் தேதி அன்று பதிவு செய்யப்பட்ட வழக்கில்தான் தற்போது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருக்கிறோம்.

அதில் காவல்துறை அதிகாரிகளின் பெயர்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை. இந்தநிலையில் 2025-ம் ஆண்டு விபச்சார தடுப்பு பிரிவு போலீஸார் பதிவு செய்த வழக்கில் அப்போதைய போலீஸ் கமிஷனர் அருண், கூடுதல் கமிஷனர் ராதிகா, துணை கமிஷனர் வனிதா, உதவி கமிஷனர் யாஸ்மின், இன்ஸ்பெக்டர் மகேஷ் குமார் உள்பட ஏழு பேரை குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்த்திருக்கிறோம். அந்த வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை. இது தொடர்பாக டி.ஜி.பி மகேஷ்குமாருக்கும் ரிப்போர்ட் ஒன்றை சமர்பித்திருக்கிறோம்.

இந்தத் தகவலை போக்சோ நீதிமன்றத்திலும் தெரிவித்திருக்கிறோம். கிரணைட் வீரமணி வழக்கு விசாரணையில் இருப்பதால் சில தகவல்களை வெளியில் சொல்ல முடியாது. அதே நேரத்தில் தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் ஏற்கெனவே நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. அதனால்தான் வழக்கு தொடர்பான அப்டேட்களை மீடியாக்களுக்கு உடனுக்குடன் தெரிவித்து வருகிறோம்’ என்றார்.

காவல்துறை அதிகாரிகள் மீது ஏன் வழக்கு பதிவு செய்யப்பட்டது என எஸ்.ஐ.டி போலீஸாரிடம் கேட்டதற்கு, “போக்சோ வழக்கை பொறுத்தவரை பாலியல் தொல்லைக்கு உள்ளானவர் குறித்து தகவல் தெரிந்தும் அதை காவல்துறையினருக்கு தெரிவிக்காத நபரும் குற்றம் சாட்டப்பட்டவராக கருதப்படுவர். கிரணைட் வீரமணி வழக்கை பொறுத்தவரை கிரணைட் வீரமணி, சாந்தி மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகும் பென் டிரைவ் ஆதாரம் இருந்த பிறகும் அவர் மீது ஏன் அப்போதைய போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

அதோடு இந்த வழக்கை மூடிமறைக்க லட்சக்கணக்கில் பணம் கைமாறப்பட்டதற்கான ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றன. அந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையில்தான் அருண் ஐ.பி.எஸ் உள்பட ஏழு பேரை இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராக சேர்த்திருக்கிறோம். இதை தொடர்ந்து அடுத்த குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறோம். அதில் சில முன்னாள் அமைச்சர்கள் பெயர்களும் இடம் பெறப்போகிறது .இது மட்டுமல்ல சதன் ரயில்வே யூனியன் தலைவர் கன்னையாவின் மகன் பிரகாஷ் பிடிப்பட்டு விட்டால் யார் யாருக்கு எவ்வளவு கோடி சென்றது என்பதும் தெரியும் என்றனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *