
தமிழிலிருந்து கன்னடம் எப்படி பிறந்தது என நீங்கள் கூற முடியும் இதற்கான ஆதாரம் உங்களிடம் உள்ளதா என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கன்னட மொழி குறித்து கமலஹாசன் பேசிய விவகாரத்தில் கர்நாடகாவில் தங்களைப் படம் வெளியாக விதிக்கப்பட்ட தரையை நீக்க கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த கர்நாடகா நீதிமன்றம் மொழி குறித்து பேச நீங்கள் யார் என கமலுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளது
இந்நிலையில், கமல்ஹாசன் கூறிய கருத்தில் தவறேதும் இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பதில் அளித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தக் லைஃப் பட ப்ரோமோஷன் விழாவில் கமல் கூறிய கருத்துக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதில் அளித்துள்ளார். அதில் தமிழ் குறித்த கமல் கூறிய கருத்தில் எந்த தவறும் இல்லை என்றும் தமிழில் இருந்து பிறந்ததுதான் சமஸ்கிருதம் என்றும் தெரிவித்தார். கிரேக்கம், லத்தீன் மொழிகளைவிட தமிழ் தொன்மையானது என கூறியுள்ளார். மேலும கர்நாடகாவில் நடைபெறும் போராட்டங்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


