Kallakurichi Rotary Club: இலவச புத்தகங்கள் வழங்கும் விழா!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கம் சார்பாக 23 அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு மத்திய அரசின் தேசிய திறனாய்வு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்கும் விழா ரோட்டரி சங்கத் தலைவர் இம்மானுவேல் சசிகுமார் தலைமையில் ஆசிரியர்களுடன் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது

கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்க நூற்றாண்டு மண்டபத்தில் ரோட்டரி சங்கம் சார்பாக 23 அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு மத்திய அரசின் தேசிய திறனாய்வு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்கும் விழா ரோட்டரி சங்கத் தலைவர் இம்மானுவேல் சசிகுமார் தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட தொடக்கக்கல்வி மாவட்ட கல்வி அலுவலர் ஜோதிமணி மற்றும் வட்டார கல்வி அலுவலர் உலகநாதன் மற்றும் ரோட்டரி செயலாளர் பாபு, முன்னாள் தலைவர் ராமலிங்கம், செந்தில்குமார், மற்றும் முன்னாள் இந்நாள் ரோட்டில் சங்க நிர்வாகிகள் முன்னிலையில்,ஆசிரியர்களுடன் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஒன்றியத்தில் உள்ள 23 அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு மத்திய அரசின் தேசிய திறனாய்வு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்கப்பட்டது மேலும் மாணவர்களுக்கு இதை படித்து நன்றாக தேர்வு எழுதி ஸ்காலர்ஷிப்பை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

மேலும் இதற்கு ஆசிரியர்கள் உடந்தையாக இருக்க வேண்டும் என ரோட்டரி சங்க தலைவர் இம்மானுவேல் தெரிவித்துக் கொண்டார்.மேலும் இந்நிகழ்ச்சியில் அரசு ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் ரோட்டரி சங்க இந்நாள் முன்னாள் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *