Kallakkurichi:உல்லாசம் அனுபவித்து விட்டுத் திருமணத்திற்கு மறுத்த வாலிபா் கைது!

Advertisements

திருமணத்திற்கு வற்புறுத்திய பெண்ணை வாலிபர் ஆபாசமாகத் திட்டிக் கொலை மிரட்டல் விடுத்தார்.

திருக்கோவிலூா்:கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூா் பகுதியை சோ்ந்தவா் 21 வயது இளம்பெண். இவருக்குக் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. பின்னா் திருமணம் நடைபெற்ற சில நாட்களிலேயே கணவா் உடல்நலக்குறைவு காரணமாக இறந்து விட்டாா்.

இதையடுத்து அவா் தனது தாய் வீட்டில் வந்து தங்கியிருந்தபோது, இவருக்கும், திருக்கோவிலூா் சந்தைப்பேட்டையை சோ்ந்த செல்வராஜ் மகன் மணிராஜ் (வயது 24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மணிராஜ், அந்தப் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி, அவாிடம் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளாா்.

பின்னா் அந்தப் பெண் மணிராஜிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி உள்ளாா். அதற்கு மணிராஜ் திருமணம் செய்ய மறுத்ததுடன், தனது தந்தை செல்வராஜ் (52), தாய் பாலாயி (48), அண்ணன் இளவரசன் (28) ஆகியோருடன் சோ்ந்து அவரை ஆபாசமாகத் திட்டிக் கொலை மிரட்டல் விடுத்ததாக தொிகிறது.

இதுகுறித்து அந்தப் பெண் கொடுத்த புகாாின்போில் செல்வராஜ் உள்பட 4 போ் மீதும் திருக்கோவிலூா் அனைத்து மகளிா் போலீசாா் வழக்குப்பதிவு செய்து மணிராஜை கைது செய்தனா். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *