Jammu: புல்வாமா குண்டுவெடிப்புக் குற்றவாளி மாரடைப்பால் மரணம்!

Advertisements

புல்வாமா பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ந்தேதி நடந்த தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீநகர்:ஜம்மு-காஷ்மீரிலுள்ள புல்வாமா பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி நடந்த தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

புல்வாமா குண்டுவெடிப்பில் தீவிரவாதிகளுக்குத் தளவாட உதவி வழங்கியதாக ஹாஜிபால் லால்ஹரில் வசித்து வந்த பிலால் அகமது குச்சாய் (27) என்பவரைப் போலீசார் கடந்த 2020ம் ஆண்டுக் கைது செய்யப்பட்டு கிஷ்த்வார் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிலால் உடல்நலக்குறைவு காரணமாகக் கடந்த 17ம் தேதி ஜம்முவில் உள்ள ஜிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிலாலின் உடல் பிரேத பரிசோதனை மற்றும் சட்ட முறைமைகளுக்காகப் பிணவறைக்கு மாற்றப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *