ICC Test Ranking: தொடந்து முதலிடத்தில் நீடிக்கும் இந்திய வீரர்!

டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் 10 இடத்திற்குள் இந்தியா தரப்பில் விராட் கோலி மட்டுமே உள்ளார்.

துபாய்: இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் மற்றும் ஆஸ்திரேலியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதன் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது.

அதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் முதலிடத்தில் தொடருகிறார். இதில் இந்திய வீரர்களில் விராட் கோலி மட்டுமே முதல் 10 இடத்திற்குள் உள்ளார். அவர் 6-வது இடத்தில் உள்ளார். மற்ற வீரர்களில் ரோகித் சர்மா 12-வது இடத்திலும், ரிஷப் பண்ட் 13-வது இடத்திலும் உள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக ஆஸ்திரேலிய வீரரான உஸ்மான் கவாஜா 2 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீரர் அஸ்வின் மாற்றமின்றி முதலிடத்தில் தொடருகிறார். ரபடா 2-வது இடத்திலும், கம்மின்ஸ் 3-வது இடத்திலும், பும்ரா 4-வது இடத்திலும் உள்ளனர். மற்றொரு இந்திய வீரரான ஜடேஜா 6-வது இடத்தில் உள்ளார்.

டெஸ்ட் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர்களான ஜடேஜா முதலிடத்திலும், அஸ்வின் 2-வது இடத்திலும் உள்ளனர். இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 1 இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு இந்திய ஆல் ரவுண்டரான அக்சர் படேல் 1 இடம் சரிந்து 6-வது இடத்தில் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *