மத்திய கிழக்கிற்கு நரகத்தையே கொண்டு வருவேன் – டிரம்ப்!

Advertisements

சென்னை:

மத்திய கிழக்கில் மிகப்பெரிய நரகத்தையே கொண்டு வர நான் தயார்… இதற்கான காலக்கெடு தொடங்கி உள்ளது. அதற்குள் ஹமாஸ் அமெரிக்காவிற்கு அடிபணிய வேண்டும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் 47வது அதிபராக நான் பதவியேற்கும் ஜனவரி 20ஆம் தேதிக்குள் அமெரிக்கா, நேட்டோ பணயக்கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால், மத்திய கிழக்கு நாடுகளை நரகமாக மாற்றவும் தயார்… அங்கே நரகத்தை இறக்கவும் நான் தயார் என்று அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் எச்சரித்து உள்ளார்.

அமெரிக்கா பணயக்கைதிகளை… நேட்டோவின் பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸுக்கு இதுவே கடைசி வாய்ப்பு. நான் அதிபராக முன் இது நடக்க வேண்டும். அதற்குப் பின் பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பே இல்லை. நான் அதிபர் ஆன பின் நடவடிக்கை மட்டுமே எடுப்பேன்… ஹமாஸ் அடிபணிய வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு அது நல்லதல்ல… ஏன் யாருக்குமே அது நல்லதல்ல.

அவ்வளவுதான் நான் சொல்வேன். அவர்களுக்கு ஏற்கனவே போதுமான நேரம் கொடுத்துவிட்டேன். இனியும் நேரம் கொடுக்க உடையும். எனக்கு இஸ்ரேலிலிருந்து தினமும் கால் வருகிறது. இந்தப் பிணைக்கைதிகள் விவகாரம் முக்கியமானது. என்னிடம் அவர்களின் குடும்பத்தினர் வந்து கதறுகின்றனர். கண்ணீர் வடிக்கின்றனர்.

இனியும் என்னால் அதைக் கேட்டுக்கொண்டு இருக்க முடியும். அந்தத் தாய்மார்களுக்கு அவர்களின் மகன்களைத் திருப்பிக் கொடுக்க வேண்டியது என் கடமை. இதற்கான காலக்கெடு தொடங்கிவிட்டது. நான் பதவி ஏற்க உள்ள நாளுக்கு முன் ஹமாஸ் இதைச் செய்ய வேண்டும், என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஹமாஸ்:

ஏற்கனவே பாலஸ்தீனத்தில் விடுதலைக்காகப் போராடி வரும் ஹமாஸ் குழு அமெரிக்காவிற்கு எதிராக அதிர்ச்சி முடிவை எடுத்துள்ளது. அதன்படி அமெரிக்காவின் மேற்பார்வையில் இஸ்ரேல் உடன் நடந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஏற்க முடியாது என்று ஹமாஸ் அறிவித்து உள்ளது.

அதாவது போர் நிறுத்த ஒப்பந்தங்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம். பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோரிக்கையின் பெயரில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம். போர் நிறுத்தம் வாய்ப்பே இல்லை.

ஹமாஸ் சிறைபிடித்து உள்ள இஸ்ரேல் படைகளை விடுதலை செய்தால்… போர் நிறுத்தம் செய்வோம் அமெரிக்காவின் வாக்குறுதியில் அடிப்படையில் இஸ்ரேல் பேச்சுவார்த்தை செய்தது.

ஆனால் இந்தப் பேச்சுவார்த்தை முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. இஸ்ரேல் மீது கண்டிப்பாகப் போர் தொடுப்போம் என்று ஹமாஸ் தெரிவித்து உள்ளது.

யார் இந்த ஹமாஸ்?:

இஸ்ரேலில் 1995ல் செய்யப்பட்ட ஓஸ்லோ ஒப்பந்தம்தான் ஹமாஸ் வளர்ச்சி அடைய முக்கிய காரணமாக அமைந்தது. அந்த ஒப்பந்தத்தின்படி வெஸ்ட் பேங்க், பாலஸ்தீனத்தின் பெரும்பகுதி இஸ்ரேல் கட்டுப்பாட்டில் வந்தது. பாலஸ்தீன விடுதலையில் பிஎல்ஓ என்ற அமைப்புதான் அத்தனை காலம் போராடி வந்தது.

அவர்கள் சரியாகப் போராடவில்லை என்று கூறி… அவர்களுக்குப் பதிலாக ஆயுதம் தாங்கிய அமைப்பான ஹமாஸ் படையும் காசாவில் களமிறங்கியது. அருகில் எகிப்தில் தோன்றிய அந்தப் படை… பாலஸ்தீன சுதந்திரத்திற்காகக் காஸாவிற்கு சென்றது. ஹமாஸ் 1987 இல் நிறுவப்பட்டது, எகிப்தின் முஸ்லீம் சகோதரத்துவ இயக்கம் என்ற பெயரில் இந்தக் குழு தோன்றியது. இது 1950 களிலிருந்து காசா பகுதியில் தீவிரமாகச் செயல்பட்டு பல்வேறு தொண்டு மற்றும் சமூக அமைப்புகளின் நெட்வொர்க் மூலம் செல்வாக்கைப் பெற்றது.

1980 களில் ஹமாஸ் இயக்கம் ஒரு சக்திவாய்ந்த அரசியல் அமைப்பாக மாறியது, PLO வின் செல்வாக்கை மீறி இந்த அமைப்பு வளர்ந்தது. அதன்பின் 2000-2005 வரை காஸாவிலும், ஜெருசலேமிலும் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் 2005ல் காசாவிலிருந்து இஸ்ரேல் வெளியேறியது. காஸா ஹமாஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் கீழ் உள்ளது. ஆனால் காஸாவின் அனைத்து எல்லைகளும் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ளது.

தேர்தல் நடத்துவார்கள்:

ஹமாஸ் என்பதை மேற்கு உலகம் தீவிரவாத அமைப்பு என்று சொன்னாலும் பல்வேறு உலக நாடுகள் அப்படி சொல்வதில்லை. அவர்களைப் பொறுத்தவரை ஹமாஸ் என்பது பாலஸ்தீன விடுதலை அமைப்பு ஆகும். இவர்கள் எந்த அளவிற்கு ஜனநாயக ரீதியான அமைப்பு என்றால்… இவர்கள் தேர்தல் நடத்துவார்கள். பல்வேறு துறைகளுக்கு அமைச்சர்களைப் போடுவார்கள்., காஸாவில் நேர்மையாக மக்கள் அதிகார ஆட்சியை நடத்தி வருகிறார்கள்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *