Guinness World Records: மூடிகளை தலையால் திறந்து கின்னஸ் சாதனை.!

Advertisements

இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் இந்த வீடியோ பகிரப்பட்ட உடன் 17 லட்சம் பேர் அதனைப் பார்வையிட்டு உள்ளனர்.

ராவல்பிண்டி: உலகம் முழுவதும் அரிய சாதனைகளைப் படைத்தவர்கள், கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த, முகமது ரஷீத் என்பவர் புதிய உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இதன்படி, மேஜை ஒன்றின் முனை பகுதியில் பாட்டில்களை இறுக பிடித்துக் கொண்டு திறமையாக, அதன் மூடிகளை அவருடைய தலையால் விரைவாக முட்டி, நீக்குகிறார்.

பாட்டில்களை ஒன்றன் பின் ஒன்றாக அவருடைய உதவியாளர்கள் அனுப்பி கொண்டே இருக்கின்றனர். அதிவேகத்தில் இந்தப் பாட்டிலின் மூடிகளை நீக்கும் செயலைத் தலையால் செய்து ரஷீத் சாதனை படைத்திருக்கிறார். அவர் மொத்தம் 77 பாட்டில் மூடிகளை ஒரு நிமிடத்தில் நீக்கியுள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரியில் இந்தச் சாதனையை அவர் படைத்திருக்கிறார்.

எனினும், இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் பகிரப்பட்ட உடன் 17 லட்சம் பேர் அதனைப் பார்வையிட்டு உள்ளனர். பலரும் விமர்சனங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

கடந்த 2020-ம் ஆண்டு இந்திய தற்காப்பு கலை நிபுணரான பிரபாகர் ரெட்டி என்பவர், ஒரு நிமிடத்தில் 68 பாட்டில் மூடிகளை நீக்கியதே அப்போது சாதனையாக இருந்தது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *