Nayanthara: மகன்களுக்குப் புரபோஸ் செய்து காதலர் தினத்தைக் கொண்டாடிய நயன்!

நடிகை நயன்தாரா, தன்னுடைய இரட்டை குழந்தைகளான உயிர் மற்றும் உலகிற்கு கியூட்டாகப் புரபோஸ் செய்தபோது எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 2022-ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்குப் பின்னரும் சினிமாவில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, கைவசம் அரை டஜன் படங்களுடன் நடித்து வருகிறார். மறுபுறம் அவரது கணவர் விக்னேஷ் சிவனும் எல்.ஐ.சி படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். அப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாகக் கீர்த்தி ஷெட்டி நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

நடிகை நயன்தாரா, தற்போது சசிகாந்த் இயக்கிய டெஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக யூடியூப்பர் டியூடு விக்கி இயக்கத்தில் உருவாகும் மண்ணாங்கட்டி, துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் எனப் பிசியாக நடித்து வருகிறார். இதுதவிர விக்னெஷ் சிவன் இயக்கும் எல்.ஐ.சி படத்திலும் நடிகை நயன்தாரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் அதுகுறித்து அறிவிப்பை வெளியிடாமல் சீக்ரெட்டாகவே வைத்துள்ளனர்.

சினிமாவில் பிசியாக இருந்தாலும் தன் மகன்களுடன் நேரம் செலவிடுவதில் கவனமாக இருந்து வருகிறார் நயன்தாரா. அவரின் இரட்டை குழந்தைகளான உயிர் மற்றும் உலக் ஆகிய இருவரும் தற்போது மளமளவென வளர்ந்து நடக்கவும் தொடங்கி உள்ளனர். அவர்களுடன் எடுத்த புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள நயன்தாரா, இன்று காதலர் தின ஸ்பெஷலாகச் சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

அந்தப் புகைப்படங்களில் மகன்களுக்கு ரோஜா பூக்கொடுத்துப் புரபோஸ் செய்கிறார் நயன். அதை அவரது மகன்கள் ஆசையோடு வாங்கிக்கொண்டு, அவருக்கு அன்பு முத்தம் கொடுத்த தருணத்தைப் போட்டோவாக எடுத்துத் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார் லேடி சூப்பர்ஸ்டார். இந்தக் காதலர் தினத்தை ஸ்பெஷல் ஆக்கியதற்காக அவர்கள் இருவருக்கும் அந்தப் பதிவில் நன்றியும் தெரிவித்துள்ளார் நயன்தாரா. அவரின் இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *