
தாய்லாந்து சர்வதேச நாடுகளிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட முதல் ரகம் G.O (1.1/2) கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்ததோடு 3 பேரைக் கைது செய்தனர். மேலும் முக்கிய நபரான 3 பேரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை அண்ணாநகர் பிரதான சாலையில் அமைந்துள்ள நியூ ஆவடி ரோடு சாலை யில் இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அண்ணாநகர் போலீசார் வாகனங்கள் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவ்வழியே அதிக வேகத்துடன் வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று
போலீசார் வழிமறித்து சோதனை செய்தபோது காரில் உள்ள மூன்று நபர்கள் போலீசார் கேள்விகள் கேட்டதற்கு முன்னுக்கு பின்னாகப் பதில் அளித்தனர் சந்தேகம் அடைந்த போலீசார் காரைச் சோதனை செய்தபோது அதில் G.o போதைப் பொருள்கள் இருந்தது கண்டுபிடித்தனர்,
பின்னர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் அழைத்துச் சென்றுமுதற்கட்ட விசாரணை செய்தபோது சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த (1) சண்முகராஜ் வ /65,/ (2)சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த யாசர் அரபத் 34/ (3) சென்னை இராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது ஜெய்னுல் ரியாஸ் 30,என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும்தீவிர விசாரணையில் தாய்லாந்து சர்வதேச நாடுகளிலிருந்து கடத்திவரப்பட்ட. முதல் ரகம் கொண்ட G.O கஞ்காவான போதைப் பொருளைக் கடத்தி வரப்பட்டதும் தங்களுக்கும் மேலான முக்கிய மூன்று குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் உள்ளதாக வாக்குமூலம் அளித்தனர், எனவும் விசாரணையில் தெரிய வந்தது
பின்னர் உயர் தர 1கிலோ, 51 கிராம், O.G உயர் ரக கஞ்சா, மற்றும் 3 செல்போன், ஒரு காரெனப் போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் உயர்தர கஞ்சாவை கடத்தி வந்த மூன்று பேரையின் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

