
விருத்தாசலத்தில் கஞ்சா வியாபாரி குண்டர் தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் சக்தி மற்றும் காவல்துறையினருக்கு மணிமுத்தாற்று பாலத்தின் கீழ் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல்கிடைத்தது.அதன் அடிப்படையில் காவல்துறையினர் மணிமுத்தாற்று பாலத்தின் கீழ் கண்காணித்தபோது விருத்தாசலம் குப்பநத்தம் கோட்ரஸ் தெருவை சேர்ந்த பழனிவேல் என்பவருடைய மகன் சரவணன் என்பவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார்.

அவரை மடக்கி பிடித்த மதுவிலக்கு அமல்பிரி காவல்துறையினர் அவரிடம் இருந்த சுமார் 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.பின்னர் சரவணனை கைது செய்த மதுவிலக்கு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கஞ்சா விற்பனை செய்த சரவணன்மீது விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் 3 கஞ்சா வழக்குகளும், விருத்தாச்சலம் மதுவிலக்கு அமல்பிரிவில் ஒரு கஞ்சா வழக்கும் என மொத்தம் 4 கஞ்சா வழக்குகள் உள்ளன.

இவரின் தொடர் போதைபொருள் விற்பனை குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜாராம் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ். ஓராண்டு காலம் தடுப்பு காவலில் வைக்க ஆணையிட்டதின் பேரில் கஞ்சா வியாபாரி சரவணனை ஓராண்டு குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

