Flying Wing Technology: இந்தியாவிற்கு மேலும் ஒரு வெற்றி!

Advertisements

ஆளில்லா விமானம் மூலம் ஆயுதம் ஏந்தி தாக்கும் சோதனை முயற்சியை வெற்றிகரமாக நடத்தியதாக டி.ஆர்.டி.ஓ., தெரிவித்துள்ளது.

டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆளில்லா விமானத்தில் ஆயுதங்களை சுமந்து சென்று எதிரிகளை தாக்குதல் நடத்தும் விமானத்தை வடிவமைத்துள்ளது.

புதிய தொழில்நுட்பத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, தானாக இறகுகளை கட்டுப்படுத்தி பறக்கும் ஆளில்லா சிறு விமானத்தை பரிசோதித்தது DRDO.

கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள ஏரோநாட்டிக்கல் ஓடுதளத்தில் நடந்த சோதனை வெற்றியடைந்ததாக அதிகாரிகள் DRDO அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாரதத்தின் விமானப் படைக்கு இது மேலும் ஒரு வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *