
இலங்கைச் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 15 பேர் விமானத்தில் சென்னைக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் தனி வாகனத்தில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்குவதும், மீன்பிடி கருவிகளைச் சேதப்படுத்துவதும், அவர்களைச் சிறைபிடிப்பதும் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி பிப்ரவரியில் இருவர், ஜூலையில் 9 பேர், ஆகஸ்டில் நால்வர் என இலங்கைக் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர்.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்களை அந்நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்தது. இதையடுத்து 15 பேரும் விமானத்தில் சென்னைக்கு வந்தனர். விமான நிலையத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள் அவர்களை வரவேற்றனர்.
தனி வாகனத்தில் அவர்களைச் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
