
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்துக்கு எதிராகத் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கில் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்டச் செயலாளர்களும் கலந்துகொண்டனர்.
இதில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சுதந்திரமான நேர்மையான தேர்தலுக்கு அச்சுறுத்தலாக உள்ள வாக்குத் திருட்டுக்கும், சிறப்புத் தீவிரத் திருத்தத்துக்கும் கண்டனம் தெரிவித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வாக்காளர் பட்டியல் தயாரிப்பும், தேர்தலும் நேர்மையான முறையில் இருக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வெளி மாநிலத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்களைத் தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் சேர்க்க எதிர்ப்புத் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


