Advertisements

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலையீட்டால் தமிழக காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியில் முடிவு ஏற்பட்டுள்ள தகவல் தெரிய வந்துள்ளது.தற்போது ஆளும் திமுக கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருக்கிறது திமுகவை பொருத்தவரையில் காங்கிரஸ் கட்சி பலமான கூட்டணியாக பார்க்கப்படுகிறது இது தவிர திமுக தலைவர் மு க ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இடையே மிகுந்த நட்பு நிலவி வருகிறது
இந்த நிலையில் தங்களுக்கு கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகள் ஒதுக்கி தர வேண்டும் அமைச்சரவையில் பதவி தர வேண்டும் என்று தமிழக காங்கிரசார் மத்தியில் கோஷங்கள் எழுந்தன இது மட்டுமல்லாமல் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்றும் பேசி வந்தார்கள் இதனால் திமுக காங்கிரஸ் கூட்டணி இடையே பலவித குழப்பங்கள் நிலவி வந்தன. இதற்கிடையே தமிழக வெற்றி கழகத்துடன் இணைய போவதாகவும் காங்கிரஸ் கட்சியினர் திரை மறைவில் மிரட்டி வந்தனர்
இந்த சூழ்நிலையில் திமுகவுடன் கூட்டணி குறித்து பேசுவதற்காக காங்கிரஸ் மேலிடம் ஒரு குழுவை அமைத்தது இதன் மூலம் தமிழக வெற்றிக்கழகத்துடன் இணைய வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியானது இந்த நிலையில் திமுகவுடன் காங்கிரஸ் குழுவினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள் அப்பொழுது தங்களுக்கு கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகள் தரவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது ஆனால் திமுக தரப்பில் அதற்கு வாய்ப்பில்லை என தகவல் தெரிவித்தனர்
இதனை தொடர்ந்து கூட்டணியில் மேலும் குழப்பம் நிலவுவதாக டெல்லி மேலிடத்திற்கு தகவல் அனுப்பப்பட்டது
இதனைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை ராகுல் காந்தி அழைத்து திமுகவுடன் சமரசமாக செல்லுங்கள் கூட்டணி குழப்பங்கள் செய்து கொள்ள வேண்டாம் என தகவல் தெரிவித்திருக்கிறார்.முன்னதாக பீகார் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும் அந்த அடிப்படையில் தமிழகத்திலும் அதிக தொகுதிகள் கேட்டு வாங்கலாம் என காங்கிரஸ் கட்சி நினைத்திருந்தது.ஆனால் பீகார் தேர்தலில் 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் ஆறு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது இதன் மூலம் காங்கிரஸ் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து இருக்கிறது.
இதன் எதிரொலியாக தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தால் அது அகில இந்திய அளவில் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என ராகுல் ஆலோசனை செய்ததாக சொல்லப்படுகிறது.இதன் அடிப்படையில் தற்பொழுது திமுக கூட்டணியுடன் விலக நேர்ந்தால் அது இந்தியா கூட்டணியையும் பாதிக்கும் எனவும் ராகுல் காந்தி யோசித்து வருகிறார் இதன் அடிப்படையில் தற்பொழுது திமுக ஒதுக்கி இருக்கும் தொகுதிகளை மட்டும் பெற்றுக் கொள்வது என காங்கிரஸ் நிர்வாகிகள் குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது .எனவே திமுக காங்கிரஸ் கூட்டணி பற்றி இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டு விட்டன இந்த முடிவுகள் அடுத்த மாதம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
Advertisements




