DMK Candidate List 2024: புதியவர்களுக்கு வாய்ப்பு.. வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட மு.க.ஸ்டாலின்!

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் முதல்கட்டத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், திமுக சார்பாகப் போட்டியிடவுள்ள 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளத் திமுக கூட்டணி தயாராகி வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்குப் புதுவை மற்றும் தமிழகத்தில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குத் தலா இரண்டு தொகுதியும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதியும், மதிமுக, முஸ்லிம் லீக், கொமதேக ஆகிய கட்சிகளுக்குத் தலா ஒரு இடமும் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 21 தொகுதிகளில் திமுக போட்டியிடவுள்ளது. இந்தநிலையில் திமுக சார்பாகப் போட்டியிடவுள்ள 21 வேட்பாளர்களின் பெயர்களைத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுக வேட்பாளர்கள் யார்.?

மத்திய சென்னை தயாநிதிமாறன், வடசென்னை கலாநிதி வீராசாமி ,தென் சென்னை தமிழச்சி தங்கபாண்டியன், வேலூர் கதிர் ஆன்ந்த், அரக்கோணம் ஜெகத்ரட்சகன் ஸ்ரீபெரும்புதூர் டி ஆர் பாலு, தருமபுரி ஆ மணி, கோவை கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி ஈஸ்வர சாமி, ஈரோடு பிரகாஷ் நீலகிரி ஆ ராசா, தஞ்சாவூர் முரசொலி, பெரம்பலூர் அருண் நேரு, தேனி தங்க தமிழ்ச்செல்வன்,  தூத்துக்குடி கனிமொழி கருணாநிதி, தென்காசி ராணி ஸ்ரீகுமார், கள்ளக்குறிச்சி மலையரசன், சேலம் செல்வகணபதி ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பொன்முடி மகன் கவுதம சிகாமணிக்கு கள்ளக்குறிச்சியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது, அமைச்சர் கே.என் நேரு மகன் அருண் நேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *