Dindigul Crime: ஆட்டோ ஓட்டுநர் கத்தியால் குத்தி கொலை!

Advertisements

திண்டுக்கல் அருகே நிலத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் குத்தி கொலை செய்த உறவினர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே நிலத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநரை கத்தியால் குத்தி கொலை செய்த உறவினர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். வேடசந்தூர் அருகே உள்ள கருப்பசாமி என்ற ஆட்டோ ஓட்டுநருக்கு அதே பகுதியில் 1ஏக்கர் 5சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தை பங்கு பிரித்து தரக்கோரி வெள்ளைச்சாமியின் குடும்பத்தினர் கருப்புசாமியிடம் தகராறு செய்து வந்துள்ளனர்.

இதனால் இரு குடும்பத்தினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் தகராறு ஏற்படவே கருப்பசாமி அவரது சகோதரர் பண்ணைக்காரன், அண்ணன் மகன் மகராஜன் ஆகியோர் 3 பேரை வெள்ளைச்சாமி கத்தியால் குத்தினார். இந்த சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே கருப்பசாமி உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் வெள்ளைச்சாமி அவரது மனைவி தங்கம் மற்றும் மகன்கள் முனியப்பன், பார்த்தசாரதி ஆகிய 4பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *