Dharsha Gupta: கண்டமேனிக்கு கவர்ச்சி காட்டி ரசிகர்களுக்கு விருந்து!

Advertisements

காதலர் தினத்தன்று கவர்ச்சி உடையணிந்து நடிகை தர்ஷா குப்தா நடத்திய போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சோசியல் மீடியாவின் வளர்ச்சி, விஸ்வரூபம் எடுத்துள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்னர் வரை சினிமாவில் சான்ஸ் வேண்டும் என்றால் போட்டோவை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு ஆபீஸாக வாய்ப்பு தேடி அலைய வேண்டும். ஆனால் தற்போது சோசியல் மீடியாவின் வளர்ச்சியால் அது மிகவும் எளிதாகிவிட்டது.

இன்றைய காலகட்டத்தில் இன்ஸ்டாகிராமில் விதவிதமாகப் போட்டோ பதிவிட்டாலே போதும், அது வைரல் ஆனால் சினிமா வாய்ப்புகள் வீடு தேடி வரும். அப்படி சோசியல் மீடியா மூலம் பேமஸ் ஆகி தற்போது சினிமாவில் கலக்கிக்கொண்டிருப்பவர் தான் தர்ஷா குப்தா. இவர் பக்கா கோயம்புத்தூர் பொண்ணு.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் விதவிதமாகக் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி தினசரி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இளசுகளின் மனசை கொள்ளை கொண்டார் தர்ஷா. அதன்மூலம் அவருக்கு லட்சக்கணக்கில் பாலோவர்களும் கிடைத்தனர். அந்தப் போட்டோஷூட் அவருக்குச் சீரியலில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்று தந்தது. இதையடுத்து செந்தூரப்பூவே சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

பின்னர் மோகன் ஜி இயக்கிய ருத்ர தாண்டவம் படம்மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாகக் காலடி எடுத்து வைத்தார் தர்ஷா குப்தா. அதன்பின்னர் ஓ மைக்கோஸ்ட் படத்தில் கவர்ச்சியில் மிரட்டிய அவர், தற்போது மெடிக்கல் மிராக்கிள் என்கிற திரைப்படத்தில் யோகிபாபு உடன் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு ரெடியாகி வருகிறது.

சினிமாவில் பிசியாக நடித்து வந்தாலும் போட்டோஷூட் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ள தர்ஷா, காதலர் தின ஸ்பெஷலாகக் கவர்ச்சி போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார். அந்தப் போட்டோஷூட்டில் சேலையை சரியவிட்டு வாயில் ரோஜாவைக் கடித்தபடி கண்டமேனிக்கு கவர்ச்சி காட்டி இருக்கிறார் தர்ஷா. அந்தப் போட்டோஸ் தற்போது சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *