
தாராபுரம் அருகே குமாரபாளையம் அரசுப் பள்ளி ஆசிரியை மாணவிகளைக் கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்ததாகப் பள்ளி மாணவிகள் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியீடு!
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட குமாரபாளையத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் படிக்கும் கருங்காலிவலசு கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீநிதி, கனிஷ்கா ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவிகளைப் பள்ளி தலைமை ஆசிரியை இளமதி ஈஸ்வரி கழிவறை சுத்தம் செய்ய வைத்துச் சிறுமிகள் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வந்தது.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் கவனத்திற்கு சென்றது. உடனடியாகத் தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசன், வட்டாட்சியர் கோவிந்தசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா ஆகியோருக்கு சம்பந்தப்பட்ட குமாரபாளையம் அரசு நடுநிலைப்பள்ளிக்கு சென்று விசாரணையைத் தொடங்க அறிவுறுத்தினார்.
அப்போது கருங்காலி வலசு பகுதியைச் சேர்ந்த உதயகுமார் வயது 35, லாரி ஓட்டுநர் மகள் கனிஷ்கா இவர் டி.குமாரபாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் இந்த ஆண்டு ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். பாபு கூலி இவரது மகள் ஸ்ரீநிதி, ஆகிய இருவரையும் தலைமை ஆசிரியை
இளமதி ஈஸ்வரிகடந்த ஒரு மாத காலமாகப் பள்ளியின் கழிவறைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தி வந்ததாகவும்ஆறாம் வகுப்பில் 15 பேர் படிக்கும் நிலையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் மாணவிகள் என்பதால் நாங்கள் இருவரும் மட்டுமே கழிவறையை சுத்தம் செய்து வந்தோம் தினந்தோறும் கழிவறையை சுத்தம் செய்யவில்லை என்றால் காலை வந்தவுடன் தலைமை ஆசிரியை இளமதி ஈஸ்வரி பெரம்பால் அடிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு கல்வித்துறை மூலம் கழிவறை சுத்தம் செய்யும் பணிக்காக அரசு நிதியிலிருந்து பணம் வழங்கப்படுகிறது. அவ்வாறு வழங்கப்படும் தொகையைத் தலைமை ஆசிரியர் தனது சொந்த உபயோகத்திற்காகப் பயன்படுத்திக்கொண்டு மாணவர்களிடம் கழிவறையை கழுவ வைத்துள்ளார். மேலும் வகுப்பறைகளைக் கூட்டும் பணி போன்றவற்றை ஆசிரியை மாணவிகளிடமே வேலையை வாங்கி உள்ளார் படிக்கும் பருவத்தில் படிப்பு மட்டுமே கவனம் செலுத்த வேண்டிய நிலையில் இது போன்ற செயல்களில் ஈடுபடுத்திய தலைமை ஆசிரியர்மீது கடும் தண்டனை விதிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

