

அன்புள்ள தனுசு ராசி நேயர்களே:
குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும், 10-ல் செவ்வாய், 9, 10-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் உங்களது மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய மாதமாக இம்மாதம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் சிறப்பாக அமையும்.
திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியும்.
பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். கணவன்& மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும்.
உற்றார் உறவினர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகி மனநிம்மதி ஏற்படும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்க கூடிய வாய்ப்பும் அமையும்.
தொழில் வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக வளர்ச்சி உண்டாகும்.
கூட்டாளிகளால் அனுகூலமானப் பலனைப் பெறுவார்கள். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். கொடுக்கல்& வாங்கல் லாபகரமாக இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் ஏற்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு திறமைக்கு ஏற்ற வேலை வாய்ப்புகள் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
பரிகாரம்:
வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடும், செவ்வாய்க்கிழமை துர்கை வழிபாடும் செய்து வந்தால் இல்லத்தில் சுபிட்சமும் நற்பலன்களும் உண்டாகும்.
சந்திராஷ்டமம் – 10-09-2023 காலை 10.25 மணி முதல் 12-09-2023 இரவு 11.00 மணிவரை.

