Consumer Court Orders IndiGo: பயணிகளின் உடைமைகளை ஒப்படைக்க தவறியதாக வழக்கு!

Advertisements

உரிய நேரத்தில் பயணியில்ன் உடைமைகளை ஒப்படைக்காத  இண்டிகோ நிறுவனத்துக்குரூ.70,000 வழங்க வேண்டும் என நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.

பெங்களூரு: கர்நாடகாவைச் சேர்ந்த வேதவியாஸ்-சுரபி தம்பதியினர் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 1-ந்தேதி, விடுமுறையை கொண்டாடுவதற்காகப் பெங்களூருவிலிருந்து அந்தமான் தலைநகர் போர்ட் பிளேருக்கு இண்டிகோ விமானத்தில் பயணித்துள்ளனர். ஆனால் அவர்கள் போர்ட் பிளேர் சென்றடைந்த பின்னர், அவர்களது உடைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் அடங்கிய உடைமைகள் விமான நிலையத்திற்கு வந்து சேரவில்லை.

இதுகுறித்து விமான நிறுவனத்திடம் கேட்டபோது, அடுத்த நாள் அவர்களது உடைமைகள் வந்து சேரும் எனக் கூறப்பட்டதாகத் தெரிகிறது. இதன் பின்னர் இரண்டு நாட்கள் கழித்து நவம்பர் 3-ந்தேதி அந்தத் தம்பதியினரின் உடைமைகள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனால் விடுமுறையை கொண்டாடுவதற்காகச் சென்ற இடத்தில் கடும் மன உளைச்சலுக்கு ஆளான தம்பதி, இது தொடர்பாக நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், இண்டிகோ நிறுவன ஊழியர்கள் உடைமைகளை விமானத்தில் ஏற்றத் தவறியது உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்ட தம்பதிக்கு இண்டிகோ நிறுவனம் ரூ.70,000 வழங்க வேண்டும் என நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *