
கோவை அவிநாசி சாலையில் தமிழ்நாட்டின் நீளமான, இந்தியாவில் மூன்றாவது நீளமான உயர்மட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
கோவையில் வாகனப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் அவிநாசி சாலையில் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிப்பாளையம் முதல் பத்துக் கிலோமீட்டர் தொலைவுக்கு உயர்மட்ட நால்வழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு 2020ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது.
1791 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் கீழ் பசுமை வளர்ப்பு, நடைபாதை அமைப்பு, மின்விளக்குகள், மழைநீர் வடிகால் வசதிகள் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் நீளமானதும், இந்தியாவில் மூன்றாவது நீளமானதுமான இந்தப் பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அதன்பின் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிப்பாளையம் வரை பாலத்தில் காரில் சென்று பார்வையிட்டார்.
இந்த விழாவில் அமைச்சர் கே.என்.நேரு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பங்கேற்றனர்.
திறப்பு விழாவையொட்டி நேற்றிரவு பாலம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
