பாமக நிறுவனர் ராமதாஸுக்கு டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

Advertisements

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸின் 85-வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பா.ம.க.வின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் நேரிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது; இன்று 85-ஆவது பிறந்தநாள் காணும் மருத்துவர் அய்யா ராமதாஸுக்கு வாழ்த்துகள்!. இந்த மண்ணில் வேரூன்றியுள்ள சமூகநீதி அரசியலும் தமிழ் உணர்வும் தழைக்கத் தங்களது உழைப்பு பயன்படட்டும்! என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *