
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ படத்தின் சக்சஸ் மீட் நடத்த படக்குழு திட்டமிட்டு வருகிறது.
கடந்த அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை ஒட்டி நடிகர் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படம் வெளியானது. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையைக் கொண்டு உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று ரூ.300 கோடி வசூலைத் தாண்டியது.
இந்நிலையில் ‘அமரன்’ படத்தின் வெற்றிக்குப் பிரம்மாண்டமான விழா நடத்த தயாரிப்பாளர் கமல்ஹாசன் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வாரெனத் தெரிகிறது. தற்போது அமெரிக்காவில் இருக்கும் கமல்ஹாசன் சென்னை திரும்பியது இதற்கான பணிகளைத் தொடங்குவார் என்கின்றனர்.



