
ஐரோப்பிய நாடுகளை போல் தமிழகமும் மாற வேண்டும் எனில் நாமும் அவர்களை போல் சுய ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அரசு சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வனத்துறை அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதையடுத்து பேசிய அவர், காடுதான்தான் புவி மூச்சுவிட உதவும் நுரையீரல், என கூறினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார். சதுப்பு நில காடுகளை மீட்டு எடுத்துள்ளதாகவும், பசுமை இயக்கம் மூலம் 10 கோடிக்கு மேலான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாகவும், தெரிவித்தார். 7 வன உயிரின காப்பகங்கள் தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஐரோப்பிய நாடுகளை போல் நமது நாடும் மாற வேண்டும் எனில் நாமும் அவர்களை போல் சுய ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என கூறினார்.




