
எழும்பூரில், மகாத்மா காந்தியின் 157 ஆவது பிறந்தநாளையொட்டி காந்தி உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை, எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் மகாத்மா காந்தியின் 157 ஆவது பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் முதலமைச்சர், தனது சமூக வளத்தளத்தில் நமது இந்தியா, அனைத்து மத மக்களுக்குமான மதச்சார்பற்ற நாடு எனும் அடிப்படைத் தத்துவத்திற்கு மகாத்மா காந்தியடிகள் வித்திட்டவர் என்றார். தொடர்ந்து அவர், நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரே அஞ்சல் தலையும் நினைவு நாணயமும் வெளியிடும் அவல நிலையில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும். இதுவே காந்தியடிகளின் பிறந்தநாளில் நாட்டு மக்கள் அனைவரும் ஏற்கவேண்டிய உறுதிமொழி என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
