Chennai: நடிகை பார்வதி நாயர் உள்பட 7 பேர்மீது வழக்குப்பதிவு!

Advertisements

பார்வதி நாயர் உள்பட 7 பேர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை:மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருப்பவர் பார்வதி நாயர். இவர் தமிழில் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே, நிமிர், சீதக்காதி, என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2022-ம் ஆண்டு தனது வீட்டிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் காணாமல் போனதாகவும் அதில் வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் என்பவர்மீது சந்தேகம் இருப்பதாகவும் குறிப்பிட்டு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து தன்னை, பார்வதி நாயர் உள்பட 7 பேர் தாக்கியதாகச் சுபாஷும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சுபாஷ் அளித்த புகார்மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கடந்த மாதம் 29-ம் தேதி உத்தரவிட்டார். இந்நிலையில், பார்வதி நாயர் உள்பட 7 பேர்மீது 3 பிரிவுகளின் கீழ் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *