
‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
பிரபல நடிகர் தனுஷ், கன்னட திரை உலகின் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், மூத்த தமிழ் திரையுலக நடிகர் நாசர், சந்தீப் கிஷன், பிரியங்கா அருள் மோகன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடித்து வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி உலக அளவில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் கேப்டன் மில்லர். முற்றிலும் மாறுபட்ட ஒரு கதைக்களத்தை கொண்ட திரைப்படமாக இது அமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இலங்கை ராணுவத்தை சேர்ந்த ஒரு ராணுவ வீரரின் கதையை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த படத்திற்கான படபிடிப்பு பணிகள் துரிதமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் சென்ற 2023ம் ஆண்டு இறுதியில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2024 பொங்கல் ரிலீஸ் திரைப்படமாக வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது.
தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் ‘கேப்டன் மில்லர்’. அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்கும் இந்தப் படம் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகிக் கவனம் பெற்றது.
இந்நிலையில், ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.



