பறவைக் காய்ச்சலைத் தடுக்க நடவடிக்கை…. அமைச்சர் அருண்ராஜ் பேட்டி!

தமிழகத்தில் பறவை காய்ச்சல் நோய் பரவுவதை தடுக்க தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம்,அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் ஆய்வு செய்தார். இதன் பின்னர் நோயாளிகளிடம் சிகிச்சை முறைகளையும் தேவைகளையும் கேட்டறிந்தார். இதையடுத்து, வேலூர் பெண்ட்லேண்ட் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்து புதிய சிடி ஸ்கேன் இயந்திர மையத்தினை திறந்து வைத்தார். இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வேலழகன்,வினோத் கண்ணா,சுதாகர் ,சிந்து உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ்,  தமிழகத்தில் இந்த ஆண்டு 7 செவிலியர்கள் கல்லூரிகள் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தார். வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 7 கோடியே 52 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் உபகரணங்கள் வாங்க நிதி ஒதுக்கியுள்ளதாகக் கூறினார். தமிழகத்தில் பறவை காய்ச்சல் நோய் பரவுவதை தடுக்க தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருவதாகத் தெரிவித்தார். தாய்லாந்து நாட்டில் கற்றறிந்த பல நல்ல விஷயங்களை நமது மாநிலத்தின் மருத்துவத்துறையில் படிப்படியாகச் செயல்படுத்த உள்ளதாகக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *