
பீகாரின் வெற்றி திமுகவிற்கு மிகுந்த பயத்தை உண்டாக்கியுள்ளது என மாநில பிரிவு அமைப்பாளர் கே.டி.ராகவன் கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியின் பாஜக பூத் கமிட்டி வலிமை மாநாடு நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பிரிவு அமைப்பாளர் கே.டி.ராகவன்,திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.சுந்தரம்,மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.எம்.ஆர். ஜானகிராமன், மாவட்ட பொதுச் செயலாளர் அன்பாலயா.எஸ். சிவகுமார், அரசு பிரிவு செய்தி தொடர்பாளர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டு 2026 சட்டமன்ற தேர்தலில் ஆற்ற வேண்டிய களப்பணிகள் குறித்தும், வாக்குச்சாவடி வாரியாக, மக்களை சந்தித்து வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டுள்ளதா?, இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் உள்ளதா ? என்பது குறித்து கண்டறிந்து பெயர்களை சேர்ப்பது,நீக்குவதற்கான பணிகளை மேற்கொள்கிறது.பூத் கமிட்டி வலிமை மாநாட்டில் மாநில பிரிவு அமைப்பாளர் கே.டி.ராகவன் பேசியபோது எஸ்.ஐ.ஆர் திருத்தத்தை திமுக எதிர்த்தாலும் , தேர்தலுக்காக வேலை செய்கின்றனர்.
அடுத்த போக்கஸ் தமிழ்நாடு தான் இனி அனைத்து தலைவர்களும் தமிழ்நாட்டில் அடிக்கடி வருவார்கள்.இது திமுகவிற்கு மிகுந்த பயத்தை உண்டாக்கும்.பாஜகவை வெற்றி பெற செய்ய நம்பிக்கையோடு உழைக்க வேண்டும் என தெரிவித்தார்.




