பிக் பாஸில் கலவரம்..விஜய் சேதுபதி ஓட்டம்: கோபத்தில் ரசிகர்கள்.! 

Advertisements
பிரபல தொலைக்காட்சியில் தொடர்ந்து வெளி வந்து கொண்டிருக்கும் பிக் பாஸ் என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி தற்பொழுது மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பி வருகிறது . அனேகமாக இதனை முன் நின்று நடத்தும் நடிகர் விஜய் சேதுபதி பாதியிலேயே ஓடிவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்ற பிரச்சனை நிலவுகிறது .
பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.  இந்தியாவிலுள்ள பல மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது . தமிழிலும் இந்த நிகழ்ச்சியை கமலஹாசன் முன்னின்று நடத்தினார்.  இதன் பின்னர் கமல்ஹாசன் வெளியேறிய நிலையில் தற்போது பிக் பாஸ் ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.  இதனை பிரபல நடிகர் விஜய் சேதுபதி முன் நின்று நடத்தி வருகிறார் .
தொடர்ந்து நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை இவ்வளவு கேவலமாக நடந்து கொண்டதில்லை என்று ரசிகர்கள் குற்றம் சாட்டும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது . குறிப்பாக நடிகர் விஜய் சேதுபதியின் பேச்சை யாரும் கேட்பதில்லை, அவர் கோபப்பட்டு பேசினால் கூட யாரும் மதிப்பதில்லை என்ற சூழ்நிலை நிலவுகிறது.
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் ரசிகர்களால் மிகவும் போற்றப்படுபவர் ஆனால் அவருக்கு தர வேண்டிய மரியாதை பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுத்தமாக கிடையாது . அது மட்டுமல்லாமல் அவரை வைத்துக் கொண்டு சண்டை போடும் நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. இதனை விஜய் சேதுபதி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் .
தற்பொழுது முக்கிய குற்றச்சாட்டு என்னவென்றால் கமலஹாசன் போன்று விஜய் சேதுபதியிடம் ஆளுமை தன்மை இல்லை என்பது முக்கிய குற்றச்சாட்டாக இருக்கிறது . விஜய் சேதுபதி முறைத்து பேசினால் கூட யாரும் கண்டு கொள்வதில்லை.
இன்னும் 70 நாட்களை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தி வருகிறது .
குறிப்பாக அக்டோபர் 27ஆம் தேதிக்கு பிறகு நடைபெற்ற நிகழ்வுகள் பார்வையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளன.  மூன்றாவது வார வெளியேற்றத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மீறி ஆதிரை வெளியேற்றப்பட்டார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எபிசொட்டில் விஜய் சேதுபதி முன்னிலையில் “நான் வீட்டிற்குள் இருக்க தகுதியானவள் ஆனால் தகுதியே இல்லாத பலர் இன்னும் உள்ளே இருக்கிறார்கள் .
இந்த நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களுக்கு சரியான புரிதல் இல்லை” என்று அவர் கூறிய கருத்துக்கள் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தின. ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் தொகுப்பாளர் விஜய் சேதுபதி பேசும்போது போட்டியாளர் கமருதீனின் செயல்களை கடுமையாக சாடினார். வீட்டில் உள்ள பெண்கள் திவாகர் அருகில் பாதுகாப்பற்றதாக உணர்கிறார்கள் என்று கமருதின் கூறிய பொய்யான தகவலை சுபிக்ஷா மற்றும் திவாகர் மறுத்ததோடு விஜய் சேதுபதியும் அதை வன்மையாக கண்டித்தார் .
இது  குடும்பத்துடன் பார்க்க உகந்த நிகழ்ச்சி அல்ல என்று விஜய் சேதுபதியே குறிப்பிட்டது பரபரப்பாக பேசப்படுகிறது .
இந்த நிகழ்ச்சியில் திவாகருடைய உருவத்தை வைத்தும் அவருடைய நடையை வைத்தும் கிண்டல் செய்வதை பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை . அதிலும் வினோத்துடன் கம்ருதீனும் சேர்ந்து கொண்டு செய்த நிகழ்ச்சிகள் எல்லாம் அநாகரிகத்தின் உச்சம் மரத்துக்கு சேலை கட்டுவது பொம்பளை பொறுக்கி போன்ற வார்த்தை பிரயோகம் எல்லாம் இதுவரை எந்த சீசனிலும் இடம் பெறாத வார்த்தைகள் ஆகும்.
இன்னொரு பக்கம் ஜூஸ் கடை டாஸ்கின் போது எப்போதும் திவாகருடன் இருக்கும் பார்வதியும் கூட திவாகரை சாப்பாட்டு விஷயத்தில் மிகவும் மோசமாக பேசினார் . பார்வதி விஷயத்தில் அடக்கி வாசிக்கும் திவாகரே ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் பொங்கி எழுந்து விட்டார் . இதில் திவாகரும் சலளைத்தவர் இல்லை யாருடன் சண்டை போட்டாலும் திரும்பத் திரும்ப நீ எல்லாம் எனக்கு ஒரு ஆளே இல்லை என்னுடைய பேக்ரவுண்ட் என்ன தெரியுமா என்றெல்லாம் வார்த்தைகளை வெளிப்படுத்துகிறார் .
அவர் எதை மனதில் வைத்துக் கொண்டு இப்படி பேசுகிறாய் என்பது அவருக்கு தான் தெரியும் கம்ருதீன் வளர்ந்த விதம் குறித்தும் பேசுகிறார் . குடும்பத்தோடு நிகழ்ச்சியை பார்க்க முடியவில்லை என்று பார்வையாளர்கள் கூறியதை போட்டியாளர்களிடம் மேற்கோள் காட்டி பேசிய விஜய் சேதுபதி அநாகரிகமான வார்த்தைகளை தவிர்க்குமாறு அவர்களுக்கு அறிவுரை சொல்லி இருக்கலாம் ஆனால் அவர் அப்படி எதுவும் சொல்லவில்லை .
இப்போதுள்ள நிலைமை நீடித்தால் விரைவில் விஜய் சேதுபதி நிகழ்ச்சியில் இருந்து கட்டாயம் வெளியேறி விடுவார் என்று பேசப்படுகிறது . ஒருவேளை விஜய் சேதுபதி விலகி விட்டால் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்துவதற்கு யாரை தேடி எடுப்பார்கள் என்பது தெரியவில்லை . எனவே தொலைக்காட்சியில் வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னால் விரைவில் ஒரு பரபரப்பு சம்பவம் நடக்கும் என்ற பேச்சு தற்போது நிலவி வருகிறது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *