Banarasi sari: குடும்ப குத்துவிளக்காக மாறிய ராஷி கண்ணா!  

Advertisements

பனாரஸ் பட்டுப் புடவையில் குடும்ப குத்துவிளக்காக மாறிய ராஷி கண்ணா!

கவர்ச்சி புயலாகச் சமூக வலைத்தளத்தில் வலம் வந்து கொண்டிருக்கும், இளம் நடிகை ராஷி கண்ணா தற்போது, பட்டுப் புடவையில்… அழகு தேவதையாக மாறி எடுத்துக் கொண்டுள்ள போட்டோஸ் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.

டெல்லியில் பிறந்து வளர்ந்த நடிகை ராஷி கண்ணா, தன்னுடைய சகோதரி வாணி கபூர் நடிகை என்பதால், இவருக்கும் நடிக்க வேண்டும் என்கிற ஆசை வந்தது. எனவே தன்னுடைய கல்லூரி படிப்பை டெல்லியில் முடித்தபின்னர், 2013 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ‘மெட்ராஸ் கபே’ என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராஷி கண்ணா.

இதைத் தொடர்ந்து தெலுங்கில் நடிகர் நாகார்ஜுனா, நாகசைதன்யாவின் குடும்ப படமாக எடுக்கப்பட்ட ‘மனம்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, அடுத்தடுத்த தெலுங்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பைத் தட்டி தூக்கினார்.

ராஷி கண்ணா, தெலுங்கில் கால்பதித்து பல இளம் ஹீரோக்களுக்கு ஜோடி போட்டது மட்டுமின்றி… எக்கச்சக்க கவர்ச்சியை காட்டி ரசிகர்கள் மனதை குளிர செய்தார்.தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி, 5 வருடங்கள் ஆன பின்னர் தான், ராஷி கண்ணாவுக்கு தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நடிகை நயன்தாரா, விஜய் சேதுபதி நடித்த ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்தார்.

இதைத் தொடர்ந்து தமிழிலும் ராஷி கண்ணா… ரொம்ப ராசியான கண்ணா எனப் பெயர் எடுத்ததால், அடுத்தடுத்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘அடங்க மறு’, விஷாலுக்கு ஜோடியாக ‘அயோக்யா’, விஜய் சேதுபதியுடன் ‘சங்க தமிழன்’, ‘துக்ளக் தர்பார்’, தனுஷுடன் ‘திருச்சிற்றம்பலம்’ போன்ற பல படங்களில் நடித்தார்.

தற்போது இவரின் கைவசம் மூன்று தமிழ் படங்கள் உள்ளது. அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களைச் சூடேற்றும் விதமாக, புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள ராஷி கண்ணா தற்போது… பர்பிள் நிற பனாரஸ் பட்டுப் புடவையில், ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் அணிந்து… தேவதைபோல் வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாகப் பார்க்கப்பட்டு வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *