வழக்கம் போல் இயங்கும் மெட்ரோ ரெயில்!

Advertisements

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலானது இன்று மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. அப்போது 90 கி.மீ. வேகத்தில் காற்று சுழன்று வீசுவதுடன் அதி கனமழையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால் பொதுமக்கள் அவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்ல அறிவுறுத்தப்பட்டனர். மேலும் மாநகர பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

Advertisements

இந்த நிலையில், சென்னை மெட்ரோ ரெயிலும் இன்று வழக்கம்போல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மெட்ரோ நிர்வாகம் கூறியிருப்பதாவது:-

பயணிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக அனைத்து ரெயில் நிலையங்களிலும் படிக்கட்டுக்களை பயன்படுத்த வேண்டும். கோயம்பேடு, பரங்கிமலை, அரும்பாக்கம் மெட்ரோ ரெயில் நிலைய பார்க்கிங் இடங்களில் மழை நீர் தேங்க வாய்ப்புள்ளதால் பயணிகள் அதனைப் பயன்படுத்த வேண்டாம். ஏதேனும் உதவி இருந்தால் – 1860 425 1515, மகளிர் உதவி எண் – 1553706 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *