
திருச்சி:திருச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* ஆளுங்கட்சியின் அத்துமீறல்களையும் மீறி விக்கிரவாண்டி தேர்தலில் பாமக வெல்லும்.
* விக்கிரவாண்டியில் போட்டியிடும் துணிச்சல் அதிமுகவிற்கு இல்லை.
* 3வது, 4வது இடத்திற்கு செல்ல நேரிடும் என்பதால்தான் அதிமுக போட்டியிடவில்லை.
* திமுகவிற்கு உதவும் வகையில் விக்கிரவாண்டியில் அதிமுக போட்டியிடவில்லை.
* பாமகவிற்கு வாக்களிக்க வேண்டாமென அதிமுக கூறி உள்ளது திமுகவிற்கு உதவும்.
* விக்கிரவாண்டியில் திமுகவை வெற்றி பெற வைக்க அதிமுக மறைமுக உதவி செய்துள்ளது.
* நீட் தேர்வு தொடர்பாகத் திமுக அரசு ஏன் வெள்ளை அறிக்கை வழங்கத் தயங்குகிறது? நீட் தேர்வுக்கு முன் – பின் மருத்துவ சேர்க்கை எப்படி நடைபெற்றது என வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
* நீட் விவகாரத்தில் விஜய் கருத்தைக் கூறுவதற்கு அவருக்குக் கருத்துரிமை உள்ளது.
* நீட் தேர்வு வந்தபிறகு அதிக அரசுப்பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளனர்.
* பாஜக எதிர்ப்பு அரசியல் என்கிற ஒன்றுக்காக நீட் தேர்வைத் தற்போது எதிர்க்கிறார்கள் என்று கூறினார்.

