பாஜக 2 ஆக உடைகிறதா? அண்ணாமலை பெயரில் புதிய இயக்கம்..! 

Advertisements
கர்நாடகாவில் உயர் போலீஸ் அதிகாரியாக இருந்து தமிழக பாஜகவுக்கு தலைவராக பதவியேற்று மிகப்பெரிய அரசியல் புயலை கிளப்பியவர் அண்ணாமலை . தமிழக பாஜக வரலாற்றில் அண்ணாமலைக்கென தனி அத்தியாயம் உண்டு. கிட்டத்தட்ட தன்னந்தனி மனிதராக பல திட்டங்களை தீட்டி மீடியாக்கள் மத்தியில் பரபரப்பாக பேசி பாரதிய ஜனதா கட்சிக்கு மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தி கொடுத்தவர் அண்ணாமலை
தற்பொழுது அவருக்கு பதிலாக திருநெல்வேலியை சேர்ந்த நைனார் நாகேந்திரனை பாரதிய ஜனதா கட்சி மேலிடம் தமிழக தலைவராக நியமித்து இருக்கிறது . நைனார் நாகேந்திரன் அண்ணாமலை அளவுக்கு தைரியமாகவும் புள்ளி விவரமாகவும் பேசக்கூடியவர் அல்ல அவர் அரசியலில் மிகவும் மென்மையான போக்கை கொண்டவர் இதனால் தமிழக பாஜக தற்பொழுது பின்னடைவை சந்தித்து வருகிறது என்பதை மறுப்பதற்கு இல்லை .
இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மேல் இட தலைவர் பதவி அண்ணாமலைக்கு வழங்கப்படும் என்று சொல்லி வந்தபோதிலும் அவருக்கு பதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை . இருந்தபோதிலும் அவர் வழக்கம் போல பாரதிய ஜனதா கட்சிக்காக மீடியாக்கள் மத்தியில் குரல் கொடுத்து வருகிறார் . இந்த நிலையில் “அண்ணாமலையின் அன்புக் கூட்டம்” என்ற பெயரில் புதிய இயக்கம் ஒன்று தொடங்கப்பட்டு அதற்கான உறுப்பினர் படிவங்கள் சமூக வலைத்தளம் மூலமாக அனுப்பப்பட்டு டெல்லி முழுவதும் ஏராளமான பேர் இந்த இயக்கத்தில் உறுப்பினர்களாக மாறி வருகின்றனர்.
இது குறித்த செய்தியை ஏற்கனவே நமது ஜேம் தொலைக்காட்சி முன்னதாக வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது .கேரளாவைச் சேர்ந்த சாஜன் என்பவர் டெல்லியில் உள்ள உத்தம் நகரில் இருந்த படி இந்த அமைப்பை செயல்படுத்தி வருகிறார் .அண்ணாமலையின் அன்பு கூட்டம் என்ற பெயரில் இந்த அமைப்பு டெல்லிக்கு வரும் தமிழர்கள் நல்வாழ்வுக்காக உதவி செய்யும் என அவர் தெரிவித்திருந்தார்
இந்த நிலையில் தற்பொழுது தமிழகத்திலும் இதற்கான உறுப்பினர் படிவங்கள் சேர்க்கும் பணி தொடங்கியுள்ளது . தமிழ்நாட்டில் மாநிலம்.. மாவட்டம்… தாலுகா வாரியாக அமைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள் . அண்ணாமலையின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த அமைப்பு மிக மும்முரமாக செயல்பட்டு வருகிறது . இதற்கான தலைமை அலுவலகம் டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள நிலையில்  பெங்களூரு மும்பை ஹைதராபாத் புனே கொல்கத்தா போன்ற நகரங்களிலும் அமைக்கப்பட்டு விரைவிலேயே சென்னையிலும் கிளை அலுவலகம் தொடங்கப்பட இருக்கிறது
இதில் முக்கியமாக வருகிற ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தை ஒட்டி அண்ணாமலையின் அன்பு கூட்டம் சார்பில் திருச்சியில் மிகப் பிரமாண்டமான மருத்துவ முகாம் ஒன்று நடைபெற இருக்கிறது . இதற்கான விண்ணப்ப படிவத்தில் பெயர் முகவரி மட்டுமல்லாமல் எந்த சட்டமன்ற தொகுதியில் வசிக்கிறீர்கள் எந்த பாராளுமன்ற தொகுதியில் வசிக்கிறீர்கள் வாக்காளர் அடையாள அட்டை எண் என்பது போன்ற தகவல்களும் கேள்விகளாக கேட்கப்பட்டுள்ளன இது தவிர அண்ணாமலை அன்பு கூட்டம் தலைமை இடத்தை தொடர்பு கொள்வதற்காக 99 11 52 52 79 என்ற கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது
இந்த இயக்கம் தமிழக பாஜகவுக்கு போட்டியாக தொடங்கப்பட்ட அமைப்பு போல் தெரிய வந்துள்ள நிலையில் இதுகுறித்து அண்ணாமலைக்கு தெரியுமா தெரியாதா என்பதற்கு விடை தெரியவில்லை . அதேசமயம் தமிழ்நாட்டில் அண்ணாமலைக்கு ஆதரவாளர்கள் ஏராளமான பேர் இருப்பதால் தற்பொழுது அண்ணாமலை அன்பு கூட்டம் அமைப்பிற்கு ஏராளமான பேர் விண்ணப்பம் செய்து உறுப்பினர்களாக பதிவு செய்து வருகிறார்கள் . அவர்களில் பலர் மாவட்ட செயலாளர் பதவிக்கும் தலைமைக் கழக பதவிக்கும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே அதிமுக கூட்டணிக்கு எதிராகவும் நைனார் நாகேந்திரனுக்கு எதிராகவும் அண்ணாமலை திரை மறைவில் செயல்பட்டு வருவதாக சொல்கிறார்கள் . இந்த நிலையில் அண்ணாமலையின் அன்பு கூட்டத்திற்கு ஆதரவு பெருகினால் தமிழக பாஜக இரண்டாக உடையும் அபாயம் இருக்கிறது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள் . ஏற்கனவே கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த அண்ணாமலைக்கு அமைச்சர் பதவி மீது ஆசை இருப்பதாக சொல்கிறார்கள்
ஒருவேளை புதிதாக கட்சி தொடங்கி அதன் மூலம் கூட்டணி சேர்ந்து தனக்கு அமைச்சர் பதவியை பெறலாமா என்பதற்காக அவர் திரைமறைவில் இந்த வேலையை செய்கிறாரா என்பதும் புரியாத புதிராக இருக்கிறது . எதுவாக இருந்தாலும் இது குறித்து அண்ணாமலை வாய் திறக்காமல் இருக்கிறார் என்பது சந்தேகத்தை கிளப்புகிறது . காரணம் இந்த அமைப்பு தொடங்கப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகின்றன இதுவரையிலும் அண்ணாமலை இது குறித்து எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை
டெல்லி பாஜக மேல் இடத்திற்கு எதிராக மாநில அளவில் புதிய போர் கொடி என்பது முதன்முதலாக தமிழகத்தில் தான் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .தமிழ்நாட்டில் இத்தகைய களேபரத்தை தொடங்கி வைத்திருக்கும் அண்ணாமலை அன்பு கூட்டத்தின் தேசிய தலைவரான சாஜனை நமது ஜெம் தொலைக்காட்சியின் சார்பாக தொடர்பு கொண்டோம் . டெல்லியில் இருந்த படி நமது ஜெம் தொலைக்காட்சியின் சிறப்பு நிருபரான ஆர் சுபாஷ் சந்திர போஸிடம் நீண்ட நேரம் அவர் உரையாடல் நடத்தினார்
அவர் பேசிய பேச்சில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த பழனிவேல் என்பவர்தான் இந்த இயக்கத்தின் நிறுவனராகவும் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார் இவர் தற்போது டெல்லியில் இருந்து மலேசியா சிங்கப்பூர் உள்ளிட்ட மேலை நாடுகளிலும் மும்பை கொல்கத்தா போன்ற முன்னணி தலைநகரங்களிலும் தங்கி இருந்து அண்ணாமலை அன்பு கூட்டத்திற்கு உறுப்பினர்களை சேர்த்து வருகிறார் தலைமை பொறுப்பாளர்களையும் நியமித்து வருகிறார்
நாம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட சாஜன் என்பவர் கேரள மாநிலம் களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர் இவர் தீவிரமான ஆர் எஸ் எஸ் அமைப்பின் தொண்டராவார் தற்பொழுது குடும்பத்துடன் டெல்லியில் வசிக்கும் இவர் பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் அண்ணாமலை அன்பு கூட்டத்தின் தேசிய தலைவராக பணியாற்றி வருகிறார் . அவரிடம் நாம் தொடர்ந்து பல கேள்விகளை தொடுத்தோம்
முதல் கட்டமாக இந்த அமைப்பு தொடங்கியது குறித்து தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தெரியுமா தெரியாதா என்று கேள்வி வைத்தோம் . அவருக்கு இது பற்றி தெரியாது நாங்கள் அவருடைய தீவிர ஆதரவாளர்கள் நாங்களாகவே தான் இந்த அமைப்பை தொடங்கி இருக்கிறோம் எப்படி தமிழ்நாட்டில் ரஜினிகாந்த் எம் ஜி ஆர் விஜய் போன்றோருக்கு ரசிகர் மன்றம் இருக்கிறதோ அதேபோல இந்த மன்றம் உதயமாகி இருக்கிறது என்றார்
இதுவரை தங்கள் அமைப்பில் எவ்வளவு பேர் உறுப்பினர்களாக பதிவு செய்திருக்கிறார்கள் என்று கேள்வி கேட்டோம் . இதுவரை 28 மாவட்டங்களில் 20 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக பதிவு செய்திருக்கிறார்கள் என்று பதில் சொன்னார் அவர் மேலும் அவர் பேசும் பொழுது உறுப்பினர்கள் சேர்க்கைக்காக புதிய ஆப் ஒன்றும் அறிமுகம் செய்யப் போகிறோம் என்ற தகவலையும் தெரிவித்தார்
இந்த அமைப்பின் நோக்கம் என்ன என்று கேட்ட பொழுது இது அரசியல் கட்சி சார்பு எதுவும் இல்லாதது மக்களுக்காக தொண்டு செய்ய வேண்டும்  என்ற நோக்கத்தோடு ஆரம்பித்திருக்கிறோம் அரசியலுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று குறிப்பிட்ட அவரிடம் எதற்காக சட்டமன்ற பாராளுமன்ற தொகுதி வாரியாக உறுப்பினர் படிவத்தில் கேள்வி எழுப்பி உள்ளீர்கள் என்று கேட்டோம்
நாங்கள் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக சமூக சேவைகள் செய்யப் போகிறோம் அதற்கு வசதியாக மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமிக்க இருக்கிறோம் எனவே தான் தொகுதிகள் பற்றி கேள்விகள் கேட்டிருக்கிறோம் என்று குறிப்பிட்டார் . வருகிற தேர்தலில் அண்ணாமலையின் அன்பு கூட்டத்தின் பணி என்னவாக இருக்கும் என்று கேட்டோம் . எங்கள் அண்ணாமலைக்கு ஆதரவாக மக்களை சேர்க்கும் பணியை செய்வோம் மற்றபடி தேர்தல் பிரச்சாரம் எதுவும் செய்யும் ஆலோசனை எங்களிடம் இல்லை இது முழுக்க முழுக்க சமூக சேவை இயக்கம் இந்த இயக்கத்தில் யாரும் இணைவதற்கு காசு பணம் எதுவும் கிடையாது இது ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் என்று குறிப்பிட்டார்
அண்ணாமலை மீது உங்களுக்கு எப்படி விருப்பம் ஏற்பட்டது என்ற கேள்விக்கு அவரைப்போல் ஒரு தலைவரை பார்க்க முடியாது எதைப் பேசினாலும் புள்ளி விவரங்களுடன் பேசுகிறார் ஆணித்தரமாக பேசுகிறார் எங்களை பொறுத்த வரையில் தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணா புரட்சித் தலைவர் எம்ஜிஆர் பெருந்தலைவர் காமராஜர் போல் அண்ணாமலை மிகப்பெரிய தலைவர் ஆவார் அவருக்கு பின்னால் நாங்கள் எப்பொழுதும் துணையாக நிற்போம் என்றார்
நீங்கள் செய்யும் செயல் தமிழக பாரதிய ஜனதா கட்சியில் பிளவுகளை ஏற்படுத்தாதா என்ற கேள்விக்கு ஒருபோதும் பிளவுகளை ஏற்படுத்தாது நாங்கள் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளர்கள் அல்லது ரசிகர்கள் அவரது பெயரில் சமூக சேவை இயக்கம் ஆரம்பித்திருக்கிறோம் எங்கள் வேலை சமூக சேவையை தவிர வேறு எதுவும் கிடையாது எனவே அரசியலுக்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது தயவுசெய்து யாரும்  வதந்திகளை கிளப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார் . இருந்தபோதிலும் அண்ணாமலைக்கு ஆதரவாக சுமார் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் இந்த இயக்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது
அவர்கள் எதிர்பார்த்தபடி ஒரு கோடி உறுப்பினர்கள் சேரும் பட்சத்தில் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சிக்கு இணையாக அண்ணாமலையும் சக்தி மிகுந்தவராக திகழ்வார் எனவே அவர் எடுக்க முடிவுகள் மிகப்பெரிய அரசியல் புயலைக் கடப்பலாம் என தெரிகிறது .
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *