அந்தமான்வீர சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி!

Advertisements

வீர சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார் . போர்ட் பிளேயர், அந்தமான், நிக்கோபார் யூனியன் பிரதேசத்தின் தலைநகர் போர்ட் பிளேயரில் உள்ள வீர சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் .

கடந்த 2019ம் ஆண்டு போர்ட் பிளேயர் விமான நிலையத்தில் ரூ.707 கோடி ரூபாய் செலவில் புதிய பன்னாட்டு ஒருங்கிணைத்த முனையம் அமைக்க பணிகள் தொடங்கின. 2022ம் ஆண்டு இந்த கட்டிடத்தை திறக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக கட்டுமான பணிகளில் தாமதம் ஏற்பட்டது. தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில், ஒருங்கிணைந்த வீர சாவர்கர் பன்னாட்டு விமான நிலைய முனையத்தை பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக திறந்து வைத்தார் .

இந்த புதிய முனையம் ஒரே நேரத்தில் 10 விமானங்களை நிறுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுக்கு 50 லட்சம் பயணிகளை கையாளும் திறன் கொண்டது. கடலையும் இயற்கையையும் பிரதிபலிக்கும் வகையில் சிப்பி வடிவில் இந்த புதிய முனையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய முனையத்தில் இரட்டை அடுக்கு மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெப்பம் குறையும், பகல் நேரத்தில் சூரிய வெளிச்சம் கிடைக்கும் என்பதால் மின்விளக்கின் பயன்பாடு குறைந்து மின்சாரம் சேமிப்பாகும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *