
வீட்டில் சமைக்கும் உணவு பொருட்களுக்குச் சுவை கூட்டும் குழம்பு தூள் மற்றும் மிளகாய் தூள் பொடியை வீட்டில் உள்ள மசாலா பொருட்கள் வைத்துச் சூப்பரான பொடியை வீட்டிலேயே தயார் செய்யலாம்.
மசாலாப் பொருட்கள் பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உணவுக்கும், சுவைக்கும் மற்றும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றன. இந்திய உணவுகள் தரமான, சுவையாக இருக்க குழம்பில் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்களுக்குக் காரணம்.
வீட்டில் சமைக்கும் குழம்புகளின் சுவையை அதிகரிப்பதில் மசாலாப் பொடிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கடைகளில் கிடைக்கும் ரெடிமேட் பொடிகளைப் பயன்படுத்துவதை விட, வீட்டிலேயே தயாரிக்கும் மசாலாப் பொடிகள் தனி சுவையும், நறுமணமும் கொண்டவை.
குறிப்பாக, குழம்பு மிளகாய் தூள் என்பது தென்னிந்திய சமையலில் தவிர்க்க முடியாத ஒன்று. அனைத்து வகையான குழம்புகளுக்கும் பயன்படுத்தக்கூடிய, சுவையான மற்றும் நறுமணமான குழம்பு மிளகாயை குடியைப் பலரும் வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தி வருகின்றனர்.
சுவையான குழம்பு தூள் தாயரிக்க தேவையான பொருட்கள்:
முழு மல்லி – 2
கிலோசோம்பு – 400
கிராம்சீரகம் – 400
கிராம்மிளகு – 200
கிராம்விரலி மஞ்சள் – 200
கிராம்மிளகாய் தூள் தயாரிக்க:
காய்ந்த மிளகாய் – 1
கிலோகாஷ்மீரி மிளகாய் – 1 கிலோ.
செய்முறை:
முதலில், மல்லி, சோம்பு, சீரகம், மிளகு மற்றும் விரலி மஞ்சள் ஆகியவற்றை நன்கு சுத்தம் செய்து, தூசி நீக்க வேண்டும். அதன்பிறகு, மிளகாய்களை சுத்தம் செய்து, காம்புகளை நீக்க வேண்டும்.
அதன்பிறகு சுத்தம் செய்த அனைத்து பொருட்களையும் தனித்தனியாகத் தட்டுகளில் பரப்பி, வெயிலில் நன்கு காய வைக்கவும். விரலி மஞ்சளை சிறிய துண்டுகளாக உடைத்து காய வைக்கவும்.காய்ந்த பொருட்களை இரண்டு பகுதிகளாக அரைக்க வேண்டும்.
முதலில், மல்லி, சோம்பு, சீரகம், மிளகு மற்றும் மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து மிஷினில் கொடுத்து அரைத்து, நைசான பொடியாக எடுத்துக் கொள்ள வேண்டும் இதுவே சுவையான குழம்பு தூள்.
இரண்டாவதாக, காய்ந்த மிளகாய் மற்றும் காஷ்மீரி மிளகாய் இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து மிஷினில் கொடுத்து அரைத்து, மிளகாய் தூளாக எடுத்துக் கொள்ளவும். காஷ்மீரி மிளகாய் சேர்ப்பதால் குழம்புக்கு நல்ல நிறம் கிடைக்கும்.
இப்போது, குழம்பு தூள் மற்றும் மிளகாய் தூள் இரண்டும் தயாராக உள்ளன. இவற்றை ஒன்றாகக் கலக்கத் தேவையில்லை. குழம்பு செய்யும்போது, தேவைக்கேற்ப குழம்பு தூளையும், மிளகாய் தூளையும் சேர்த்துக்கொள்ளலாம்.
பொதுவாக, மூன்று ஸ்பூன் குழம்பு தூளுக்கு ஒரு ஸ்பூன் மிளகாய் தூள் என்ற விகிதத்தில் சேர்க்கலாம். இப்படி சேர்க்கும்போது நிறமும், சுவையும் சமமாக அமையும்.
இந்த அரைத்த பொடிகளை நன்கு ஆற வைத்து, காற்றுப் புகாத டப்பாக்களில் போட்டுச் சேமித்து வைத்துத் தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம். இனிமேல் சமைக்கும் தாய்மார்கள் நிறம் இல்லை, மணமில்லை, சுவை இல்லையெனக் கவலைப்பட வேண்டாம்.





