நான் அந்தக் காட்சிகளில் நடிக்கவில்லை!

நடிகை சோனாக்சி சின்ஹா இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்

 

மும்பை:பிரபல நடிகை சோனாக்சி சின்ஹா. இவர் இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். கடந்த 2010-ம் ஆண்டு வெளியான தபாங் படத்தில் நடித்துச் சினிமாவில் அறிமுகமானார். அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து 14 வருடங்களாகச் சினிமாவில் நடித்து வருகிறார்.

தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக ‘லிங்கா’ படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகை சோனாக்சி சின்ஹா தனது 14 வருட சினிமா வாழ்க்கை குறித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது,

நான் தற்போது எனது 35-வது படத்தில் நடித்து வருகிறேன். ஒரு நல்ல நடிகருக்கு எப்போதும் வேலை இருக்கும். இதுவரை என் வாழ்க்கையில் எந்தப் படத்திலும் முத்தக்காட்சிகளில் நடித்ததில்லை. நான் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் இயக்குனரிடன் தொடக்கத்திலேயே இப்படிப்பட்ட காட்சிகளில் நடிக்கமாட்டேன் என்று கூறிவிடுவேன். அதற்கு அவர் ஒப்புக்கொண்டு என்னைத் தேர்ந்தெடுத்தாலும் சரி அல்லது வேறு நடிகையைத் தேர்ந்தெடுத்தாலும் சரி அதற்கு நான் தயாராகவே இருப்பேன். இவ்வாறு கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *