நடிகை சாய் பல்லவியால் பறிபோன நிம்மதி!

Advertisements

’அமரன்’ படத்தால் தன்னுடைய நிம்மதி போய்விட்டது எனக் கல்லூரி மாணவர் ஒருவர் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘அமரன்’ படம் கடந்த தீபாவளி பண்டிகைக்கு வெளியானது. இந்தப் படத்தில் இடம்பெறும் காட்சி ஒன்றில் தன்னை தொடர்பு கொள்ளும்படி நடிகை சாய்பல்லவி சிவகார்த்திகேயனுக்கு தனது செல்ஃபோன் நம்பர் தருவார். அந்தத் தொடர்பு எண் நிஜத்தில் தன்னுடையது என்றும் இதனால், தினமும் நிறையபேர் தன்னைத் தொடர்பு கொண்டு தொந்தரவு தருவதாகவும் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் வாசீகன் முன்பு தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

தீபாவளி பண்டிகையில் இருந்தே பலரும் தன்னத் தொடர்பு கொண்டு தொந்தரவு தருவதாகவும் இதனால் தன்னால் நிம்மதியாகப் படிக்கவோ தூங்கவோ முடியவில்லை எனவும் தெரிவித்திருந்தார். மேலும், இந்த எண்ணைதான் தன்னுடைய பான் கார்டு, ஆதார் கார்டு போன்றவற்றுடன் இணைத்திருப்பதாகவும் சுவிட்ச் ஆஃப் செய்தாலும் தனக்கு தொந்தரவு இருப்பதாகவும் சொன்னார். இந்தப் பிரச்சினையைச் சமூகவலைதளங்களில் படக்குழுவை டேக் செய்து தெரியப்படுத்தியும் அவர்கள் எந்தப் பதிலும் கொடுக்கவில்லை. படக்குழுவினர் உடனடியாகத் தன் எண்ணைப் படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதற்காக ரூ. 1.1 கோடி நஷ்ட ஈடு வேண்டும் என்றும் வாசீகன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *