Actress Hansika: புடவையில் கவர்ச்சி காட்டும் எங்கேயும் காதல் பட நாயகி!

நடிகை ஹன்சிகாவின் லேட்டஸ் போட்டோஷுட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

2010-ம் ஆண்டு வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் ஹன்சிகா. இதைத் தொடர்ந்து அவர் எங்கேயும் காதல் படத்தின் மூலம் பிரபலமானார்.

இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, சிங்கம் 2, மாண் கராத்தே, அரண்மனை, ஆம்பள, ரோமியோ ஜூலியட், போகன், சிங்கம் 3, புலி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

ஹன்சிகாவின் வசீகர தோற்றமும், அவரின் நடிப்பும் தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன் மூலம் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவின் பிசியான நடிகையாக வலம் வந்தார் ஹன்சிகா.

விஜய், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு, சிவகார்த்திகேயன் எனப் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார் ஹன்சிகா.

இதனிடையே ஹிந்தி படங்களுக்குச் சென்றார். தற்போது தமிழ் மற்றும் இந்தி வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். மேலும் தமிழிலும் ரௌடி பேபி, கார்டியன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த 2022-ம் ஆண்டு தனது நீண்ட நாள் நண்பரும் தொழிலதிபருமான சோஹைல் கத்துரியா என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். பல கோடி ரூபாய் செலவில் இவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவரை லட்சக்கணக்கோனார் ஃபாலோ செய்து வருகின்றனர். தனது போட்டோஷுட் புகைப்படங்களை அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

தற்போது டிசைனர் புடவையில் ஜொலிக்கும் ஹன்சிகாவின் போட்டோக்களை அவர் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களுக்கு லைக்கள் குவிந்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *