Actress Anjali:வெகேஷனை என்ஜாய் பண்ணும் நடிகை அஞ்சலி …லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

நடிகை அஞ்சலி, நியூயார்க் நகரில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியான ‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.

அப்படத்தை தொடர்ந்து ‘அங்காடி தெரு’ படத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
தொடர்ந்து எங்கேயும் எப்போதும், நாடோடிகள் 2, கலகலப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்துத் தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகையாக ஜொலித்து வருகிறார்.

தமிழ் படங்களைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். குறிப்பாகத் தெலுங்கில் இவருக்கு மவுசு அதிகம்.சினிமாவை தொடர்ந்து சோசியல் மீடியாக்களில் அதிக ஆர்வம் காட்டும் அஞ்சலி, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாவில் பதிவிடுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது அஞ்சலி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சுற்றித்திரியும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *